கடற்கரையில் நீச்சல் உடையில் இளம் நடிகை விஷ்ணு பிரியா..! – வைரல் போட்டோஸ்..!

கடந்த 1987 ஆம் ஆண்டு பெஹ்ரேனில் பிறந்தவர் நடிகை விஷ்ணுபிரியா. நடிகை மற்றும் மாடல் அழகியாக அறியப்படும் இவர் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மலையாளம் மொழியில் வெளியான ஸ்பீடு டிராக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான நாங்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மனிஷ் பாபு இயக்கத்தில் வெளியான புது முகங்கள் தேவை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக இயக்குனர் பாவேல் நவகீதன் இயக்கத்தில் வி1 என்ற திரைப்படத்தில் நடித்த இவர் தற்பொழுது கன்னித்தீவு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் ஐஸ்வர்யா தாத்தா ஆத்மா சபரி உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படி ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வினை விஜயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் அப்படி சுற்றுலா செல்லும் பொழுது அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது கடற்கரை ஒன்றில் இருந்தபடி நீச்சல் உடையில் வானத்தை நோக்கி பறந்தபடியும் ஊஞ்சலில் ஆடியபடியும் அழகாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …