” தொழிலில் அடிமேல் அடி விழுகிறதா..!” – வெயிட் பண்ணாம சொர்ணமலை கதிரேசன் சாமிய தரிசனம் பண்ணுங்க..!!

 எவ்வளவு முயற்சி செய்தாலும் தொழிலில் ஒரு ஸ்திரமான இடத்தை பிடிக்க முடியவில்லை என்ற கவலைப்படுபவர்கள் உடனே தூத்துக்குடியில் இருக்கும் சொர்ணமலை கதிரேசன் கடவுளை சென்று தரிசித்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

இந்தக் கோயில் ஆனது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரண்டு தென் புறத்தில் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவு அமைந்துள்ளது. 150 அடி உயர சொர்ணமலையில் தான் இந்த முருகப்பெருமான் வேலவனாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

 பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்த தமிழர்கள் இலங்கைக்கு வியாபாரம் நிமித்தமாக செல்லும்போது அங்கிருக்கும் கண்டி கதிர்காம முருகனின் திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

 அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தும் நல்ல விலையில் விற்று லாபத்தோடு அவர்கள் வீடு திரும்பி வருவார்க.ள் எனவே தங்களது வியாபாரத்தில் நல்ல வெற்றியை தந்த முருகப் பெருமானை இலங்கை செல்லாதவர்களும் வழிபட அந்த வியாபாரிகள் விருப்பம் கொண்டார்கள்.

 இதனை அடுத்து கண்டி கதிர்காம முருகன் தளத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து வேலவனை வேலாக பாவித்து சொர்ண மலையில் உருவான கதிரேச கடவுள் தான் இவர் என்று தல வரலாறு கூறுகிறது.

எனவே தான் இங்கே முருகனின் திருநாமம் கதிரேசன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆறடி ஐம்பொன் சிலையால் ஆன இந்த முருகப்பெருமானை வேல் வடிவில் நீங்கள் தரிசனம் செய்ய முடியும். மேலும் இந்தக் கோயில் ஆனது தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இங்கு தொழில் நஷ்டம் அடைந்தவர்கள் ஆறு விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி செவ்வரளி பூ கொண்டு கதிரேசனை வழிபட்டால் கட்டாயம் தொழில் விருத்தி ஆகும்.

 மேலும் இங்கு முருகன் பாதத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் தொழில் செய்கின்ற இடத்தில் வைத்தால் நிச்சயம் தொழில் தடைகள் நீங்கும் என்பது இன்று வரை நம்பப்பட்டு வருகிறது.

 இந்தக் கோயிலில் தைப்பூசம்,மாசி மகாமகம் திருக்கார்த்திகை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். எனவே தொழிலில் அடிமேல் அடி விழுகிறது என்று நினைப்பவர்கள் உடனடியாக இந்த திருக்கோயிலுக்குச் சென்று தங்களது வேண்டுதலை வைத்தால் நிச்சயம் கதிரேசன் அதை தீர்த்து விடுவார் என்பதில் நம்பிக்கை கொண்டு செல்லுங்கள் தொழில் வெற்றி பெறுவீர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …