“வைட்டமின் டி குறைபாடா..!” – அப்ப இந்த ஏழு பானங்களை எடுத்துக்கோங்க..!

இன்று பெரும்பாலான நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. இந்த வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதின் மூலம் எலும்புகளுக்கு போதுமான அளவு கால்சிய சத்து கிடைக்காது. கால்சியத்தை அதிக அளவு உறிஞ்சக்கூடிய தன்மையை இந்த வைட்டமின் டி தான் கொடுக்கிறது.

எனவே கால்சிய சத்து நமக்கு அதிக அளவு தேவை எனில் அதை உறுஞ்சி தருகின்ற வைட்டமின் டி போதுமான அளவு இருந்தால் மட்டுமே எலும்புகள் உறுதியாக மாறும். இந்த வைட்டமின் டி யானது இயற்கையாக நமக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கிறது.

 சூரிய ஒளியில் சென்று  வைட்டமின் டி யை கிரகிக்க முடியாதவர்கள் கீழ்காணும் பானங்களை பருகுவதின் மூலம் வைட்டமின் டி யை அதிகரித்துக் கொள்ள முடியும்.

வைட்டமின் டி யை அதிகரித்து தரக்கூடிய பானங்கள்

பால் சார்ந்த பொருட்களில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது குறிப்பாக தயிர் மற்றும் மோரில் இது அதிக அளவு உள்ளது .மேலும் தயிரை நீங்கள் லசியாக மாற்றி குடிப்பதன் மூலம் உங்களுக்கு அதிக அளவு வைட்டமின் டி கிடைக்கிறது. எனவே தினமும் லசியாக குடிக்க கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பசு மாட்டு பாலில் அதிக அளவு கால்சியம்,புரோட்டின், கொழுப்பு சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் எந்த பொருட்களிலும் இல்லாத அளவிற்கு வைட்டமின் டி உள்ளதால் இது உங்கள் வைட்டமின் டி பற்றாக்குறையை தீர்த்து வைக்கக்கூடிய அருமையான பொருள் என்று கூறலாம். எனவே பசு மாட்டு பாலை தினமும் நீங்கள் பருகுவதின் மூலம் குறிப்பிட்ட அளவு உங்களது வைட்டமின் டி ஐ அதிகரித்துக் கொள்ள முடியும்.

பாலில் இருந்து தயாரிக்கப்படக்கூடிய மோரில் அதிகளவு புரொ பயோடிக் உள்ளது. இது உங்களுக்கு மிக எளிதில் ஜீரணத்தை தருவதோடு மட்டுமல்லாமல் அடிகளவு வைட்டமின் டி உள்ளதால் உங்கள் வைட்டமின் டி பற்றாக்குறையை இந்த மோர் எளிதில் தீர்த்து வைக்கும்.

சோயாவிலிருந்து எடுக்கக்கூடிய சோயா பாலை நீங்கள் பருக வேண்டும் அல்லது இந்த சோயா பாலை கொண்டு வேறு ஏதேனும் உணவுகளை செய்தும் உண்ணலாம். இதன் மூலம் உங்களுக்கு வைட்டமின் டி அதிக அளவு கிடைக்கும்.

எந்தவிதமான வேதிப்பொருட்களையும் கலக்காமல் ஆரஞ்சு பழத்திலிருந்து நேரடியாக நீங்கள் சாறு பிழிந்து அந்த சாறேடு சர்க்கரை சேர்க்காமல் அப்படியே நீங்கள் பருகி வருவதின் மூலம் உங்களுக்கு வைட்டமின் டி அதிக அளவு கிடைக்கும்.

கேரட்டில் சாறினை பருகுவதின் மூலம் கண்ணுக்கு பார்வை அதிகரிக்கும். சக்தி கிடைப்பதோடு வைட்டமின் டி யும் உங்களுக்கு போதுமான அளவு கிடைக்கும். எனவே கேரட்டை ஜூஸ் எடுத்து சாப்பிடவும்.

தயிரோடு, சியா விதைகள் மற்றும் பல நட்ஸ்கள் சிறிதளவு சோயா பால் போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்து அதனை பருகுவதின் மூலம் உங்களுக்கு வைட்டமின் டி கிடைக்கும்.

மேற்கூறிய பானத்தை தினமும் உங்கள் உணவிற்குப் பின் ஒரு வேளை கட்டாயம் குடித்து வந்தால் உங்களுக்கு ஏற்படும். வைட்டமின் டி பற்றாக்குறையிலிருந்து இயற்கையான முறையில் நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் வைட்டமின் டி யை அதிகரிக்க இது உறுதுணையாக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …