தமிழ் சினிமாவில் நிறைய காமெடி நடிகர்கள் வந்துவிட்டனர். திரையுலகை விட்டும், மண்ணுலகை விட்டும் சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் மக்களை ரசிக்க வைத்த நகைச்சுவை காட்சிகளில் இப்போதும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
உதாரணமாக காதலிக்க நேரமில்லை படத்தில் டிஎஸ் பாலையாவிடம் நாகேஷிடம் கதை சொல்லும் காட்சி, இப்போது பார்க்க பார்க்க ரசித்து சிரிக்க தோன்றும். அதுபோல் சுருளிராஜன் காமெடி, சந்திரபாபு காமெடி என இன்றும் அவர்கள் நடித்த காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
விவேக்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நகைச்சுவை நாயகனாக ரசிக்க வைத்தவர் நடிகர் விவேக். சின்னக் கலைவாணர் என அவர் அழைக்கப்படுவதற்கு காரணம், அவர் சிரிப்புகளுடன் சிந்தனை மிகுந்த சமுதாய கருத்துகளையும் பதிவிட்டார். நல்ல புரிதலை ரசிகர்களுக்கு ஏற்படுத்த முயற்சித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம்
அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை தன் வாழ்க்கையின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் லட்சியத் திட்டத்தை கையில் எடுத்து, தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டவர்தான் நடிகர் விவேக்.
நடிகர் விவேக் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நூறு வயது வரை கிழவனாக வாழ வேண்டிய ஒரு ஆரோக்கியமான நடிகர் தனது 59வது வயதில் திடீரென மறைந்தது ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
மகனின் மறைவு
நடிகர் விவேக்கின் வாழ்க்கையில்.. ஒரு சோகம் அல்ல… இரண்டு சோகம் அல்ல.. தொடர்ந்து பல்வேறு சோகமான விஷயங்கள் நடந்தன. அதில் குறிப்பான ஒரு விஷயம் அவருடைய மகனின் மறைவு..
புத்திர சோகம் என்றால் என்ன…? என்று வார்த்தை அளவில்தான் நான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் அது எந்த அளவுக்கு நரக வேதனையை தரக்கூடிய ஒரு விஷயம் என்பதை எனக்கு காட்டி விட்டான் என் மகன் என்று பேட்டி ஒன்றில் கண்ணீர் சிந்தினார் விவேக்.
இதையும் படியுங்கள்: ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் கண்ணீர் கதை..!
அதிக நேரம் செலவிட்டது இல்லை
நான் என் மகனுடன் அதிக நேரம் செலவிட்டது கிடையாது. அதிக நேரம் பேசியது கிடையாது.. அதற்கு அவன் அனுமதித்ததும் கிடையாது.. எந்த கேள்வியாக இருந்தாலும் உண்டு, இல்லை.. வேண்டும்.. வேண்டாம்.. இவ்வளவுதான் அவனுடைய பதிலாக இருந்தது.
போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்னால் கூட முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு அதனை பயன்படுத்த முடியாதபடி செய்து விடுவான். தன்னை முத்தமிட கூட அவன் அனுமதித்து கிடையாது.
முத்தம் கொடுத்தேன்
ஆனால் இறப்பதற்கு பத்து நிமிடம் முன்பு அவனுக்கு நான் முத்தம் கொடுத்தேன். அப்போதுதான் முத்தம் கொடுக்க என்னை அனுமதித்தான். நான் முத்தம் கொடுத்து பத்து நிமிடங்கள் தான் இருக்கும். அவன் நம்மை விட்டு பிரிந்து விட்டான் என்ற செய்தி காதுகளில் புகுந்து என் நெஞ்சை கிழித்தது என கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் விவேக்.
இவருடைய இந்த பழைய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது .
இதையும் படியுங்கள்: 40 நாள் வனவாசம்.. படுக்கையில் கீர்த்தி சுரேஷ் யாருடன் படுத்துள்ளார் பாத்தீங்களா..?
கடைசியாக…
தன் மகன் இறப்பதற்கு 10 நிமிடம் முன்பு காமெடி நடிகர் விவேக் கடைசியாக மகனுக்கு முத்தமிட்ட அந்த தருணத்தில் அவர் பட்ட வேதனையை இந்த நேர்காணலில் சொல்லி, அவரது ரசிகர்களை கண்ணீர் விடச் செய்திருக்கிறார்.