நடிகர் மன்சூர் அலிகான் படத்தின் விழாவில் தொகுப்பாளினியாக இருந்த VJ ஐஸ்வர்யா கழுத்தியில் மாலையை போட்டார் நடிகர் கூழ் சுரேஷ் என்று சர்ச்சை கிளம்பியது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. சுதாரித்து கொண்ட நடிகர் கூல் சுரேஷ் தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருந்தார்.
நான் எந்த உள்நோக்கத்துடனும் அதனை செய்யவில்லை. எப்போதும் போல விளையாட்டாக செய்த விஷயம் தான். உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. நான் இப்படியான விஷயங்களில் எல்லாம் சீரியஸான ஆள் கிடையாது.
ஆனால் இதனால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன. இது எனக்கு மனசு கேட்கவில்லை. ஒருவேளை நான் செய்த அந்த செயல் அவருடைய மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார் கூல் சுரேஷ்.
அந்த நேரத்திலேயே ரசிகர்கள் பலரும் ஒரு சினிமா மேடையில் இப்படியான கேளிக்கைகள் எல்லாம் பெரிய விஷயமாக பேச வேண்டுமா..? அதுவும் கூல் சுரேஷ் எவ்வளவு ஜாலியான நபர் என்று அனைவருக்கும் தெரியும்.. இதனை பெரிய விஷயமாக பூதாகரமாக்கி விட்டார் தொகுப்பாளனி VJ ஐஸ்வர்யா. இதனை மிக சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம்.
ஆனால், கூல் சுரேஷ்.. ஏதோ வேண்டும் என்று அவரை சீண்டியது போல VJ ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் இருந்தது என பேசி வந்தனர் இணையவாசிகள்.
இந்த சர்ச்சை முடிந்து சில மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில்.. சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் விழா ஒன்றில் தொகுப்பாளினாக வந்திருந்த VJ ஐஸ்வர்யாவை அங்கு இருந்த ரசிகர் ஒருவர் என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு சீண்டினார் என்று கூறியது மட்டுமில்லாமல் அந்த நபரை அத்தனை பேர் முன்னிலையில் அடித்து, தன்னுடைய காலில் விழ வைத்து என முரட்டுத்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார் VJ ஐஸ்வர்யா.
தொடர்ச்சியாக இப்படி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த அழகி யாருப்பா..? என்று இவரை வலை வீசி தேடி வருகின்றனர் ரசிகர்கள்.
உச்சகட்டமாக கேப்டன் மில்லர் விழாவில் தன்னை சீண்டிய நபரை அடித்து துவைத்தது மட்டுமில்லாமல்.. காலில் விழுடா.. என்று மோசமான வார்த்தைகளை கொண்டும் திட்டிய இவருடைய வீடியோ காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் VJ ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவும் அதே சமயம் இவருடைய அந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இவருடைய இந்த நடவடிக்கைகள் பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்று கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.