ஸ்லீவ்லெஸ் உடையில் மானாவரி கவர்ச்சியில் VJ அர்ச்சனா.. ப்பா.. எம்புட்டு அழகு.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ஒரு காலத்தில் 80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்தவர் வி.ஜே அர்ச்சனா. இந்திய சின்னத்திரை தொலைக்காட்சிகளில் முக்கியமான ஒரு வி.ஜேவாக அர்ச்சனா இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் எப்.எம் ரேடியோவில் பணிபுரிந்து வந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைத்தது.

முதன்முதலாக ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார் அர்ச்சனா. 1999 ஆம் ஆண்டு இவர் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். அப்பொழுதே அவர் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார்.

அதாவது கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடங்கினார் .அதனை தொடர்ந்து சன் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

சன் டிவியில் வாய்ப்பு:

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம், இளமை புதுமை போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அர்ச்சனா. 2007 க்கு பிறகு ஒரு வருடம் சின்ன திரையில் இருந்து விலகி இருந்தார் அர்ச்சனா. அதற்கு என்ன காரணம் என்று பெரிதாக தெரியவில்லை.

சன் டிவியுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதுதான் இதற்கு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. அதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார் அர்ச்சனா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு கல்யாணம் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் டிவியிலும் பிரபலமடைந்தார். பிறகு விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

தொடர்ந்து வாய்ப்புகள்:

இதற்கு நடுவே ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து ஜீ தமிழிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார் அர்ச்சனா. ஆனால் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளிலேயே அதிகமாக தொகுத்து வழங்கியது விஜய் டிவியில் இருந்த நிகழ்ச்சிகள்தான்.

அதேபோல நிறைய சீரியல்களிலும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் வி.ஜே அர்ச்சனா. இதனை தொடர்ந்து அவருக்கு திரை துறையிலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 2015 ஆம் ஆண்டு என் வழி தனி வழி என்கிற திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ், ஆடை, நான் சிரித்தால் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். 2021 இல் இயக்குனர் நெல்சன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ச்சனா நடித்திருந்தார்.

இதற்கு நடுவே பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு இன்னும் அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக இந்திய அளவில் அதிக வரவேற்பு பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது பழைய புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் பிரபலம் அடைய துவங்கியிருக்கின்றன.

அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் முன்பு விஜே அர்ச்சனா முன்பு இவ்வளவு அழகாக இருந்தாரா என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version