சீரியலில் அறிமுகமான புதிதில் தொங்கிட்டு இருக்கும்.. ஆனா இப்போ.. VJ அர்ச்சனா ஓப்பன் டாக்..!

டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் ஒரு கட்டத்தில், சினிமா நடிகைகளாக மாறி விடுகின்றனர். அந்த வகையில் நடிகை வாணி போஜனை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடித்த அவர், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடிக்க அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.

சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள், டிவி சீரியல்களில் நடிக்க வருகின்றனர். சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள், உடனடியாக சினிமாவுக்குள் நுழைய அவர்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது.

VJ அர்ச்சனா

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்த VJ அர்ச்சனா, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர்தான் VJ அர்ச்சனா.

வைல்டு கார்டு முறையில் வீட்டுக்குள் வந்த அவர், 100 நாட்கள் இருந்த போட்டியாளர்களை விட, மக்களின் மனதில் இடம்பிடித்து இந்த பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: பெற்ற மகன் முன்னால் அந்த கோலத்தில் சிக்கிய ரம்யா கிருஷ்ணன்.. பல நாள் தூக்கம் தொலைத்த ரகசியம்..!

ராஜா ராணி 2 சீரியல்

VJ அர்ச்சனாவின் முழு பெயர் அர்ச்சனா ரவிச்சந்திரன். துவக்கத்தில் சன்டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமான VJ அர்ச்சனா, ஆல்யா மானசாவுடன் ராஜா ராணி சீரியல் 2ல் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

VJ அர்ச்சனா, நடிகர் அருள்நிதிக்கு தங்கையான டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் VJ அர்ச்சனா, கடந்தாண்டில் வெளியான அவள் என்னவள் என்ற வெப் சீரிஸ்சிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி சில இசை ஆல்பங்களிலும் VJ அர்ச்சனா நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புடவையே கட்டத் தெரியாது

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய VJ அர்ச்சனா, ராஜா ராணி சீரியலில் நடிக்கப் போன ஆரம்பக்கட்டத்தில் தனக்கு புடவையே கட்டத் தெரியாது என்றும், யாரையாச்சும் கூப்பிட்டு எனக்கு கட்டி விடுங்க என்றுதான் கேட்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: “அந்த போட்டோவை நினைச்சாலே.. இன்னைக்கு வரைக்கும்..” – குமுறும் நடிகை ஸ்ரீரஞ்சனி..!

மேலும், அப்போது அவர்கள் கட்டி விடுவதுதான் புடவை என்றும், தாறுமாறாக உடம்பில் சுற்றி விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், சீரியலில் அறிமுகமான பொழுதில் எனக்கு புடவை கட்டத் தெரியாது புடவை கட்டினாலும் அது ஒரு பக்கம், இது ஒரு பக்கம் என தொங்கிட்டு இருக்கும்.

எக்ஸ்பர்ட் ஆகி விட்டேன்

அதனை அட்ஜஸ்ட் செய்து கொண்டு தான் நடிப்பேன். ஆனால் தற்பொழுது நான் புடவை கட்டுவதில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டேன். என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட நான்தான் புடவை கட்டி விடுவதில் எக்ஸ்பர்ட் என VJ அர்ச்சனா வெளிப்படையாக பேசி இருக்கிறார் .

ராஜா ராணி 2 சீரியலில் அறிமுகமான புதிதில், புடவை தொங்கிட்டு இருக்கும்.. ஆனா இப்போது புடவை கட்டுவதில் எக்ஸ்பர்ட் ஆகி விட்டேன் என்று VJ அர்ச்சனா ஓப்பனாக கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version