இவன் கூட வாழவே முடியாது.. விரக்தியில் அர்ச்சனா எடுத்த மோசமான முடிவு..!

நடிகைகள் தங்கள் நடிப்புத் திறன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாவது போலவே தொலைக்காட்சிகளில் வி.ஜே என்று அழைக்கப்படும் தொகுப்பாளினிகளும் அவர்களது பேச்சுத் திறனை கொண்டு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அதிக இடத்தை பிடிக்கின்றனர்.

இதனை துவங்கி வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறலாம். ஒரு தொகுப்பாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதன் மூலமாக தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு இருக்கிறார்.

அதற்கு பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் வந்த தொகுப்பாளர்களும் சரி. தொகுப்பாளினியும் சரி சிவகார்த்திகேயன் போலவே தாங்களும் பெரும் இடத்தை பெற வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக மிகுந்த ஈடுபாட்டோடு தங்கள் தொழிலை செய்து வந்தனர்.

பிரபலமான தொகுப்பாளினி:

அப்படி செய்த தொகுப்பாளினிகளில் வி ஜே அர்ச்சனா முக்கியமானவர். சாதாரண தொகுப்பாளியாக தென்னிந்திய தொலைக்காட்சிகளுக்குள் வந்த வி.ஜே அர்ச்சனா தற்சமயம் முக்கியமான பிரபலமாக இருக்கிறார் என்று கூறலாம்.

பல யூ ட்யூப் சேனல்களே கூட அவரை அழைத்து பேட்டி எடுக்கும் அளவிற்கு அவரது பிரபலம் அதிகரித்து இருக்கிறது. இப்பொழுதும் நிறைய சேனல்களில் பணிபுரிந்து வருகிறார். அதே சமயம் நிறைய விளம்பரங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

அர்ச்சனா மகள்:

அதேபோல அவருக்கு பிறகு அவரது மகள் சாராவையும் தொகுப்பாளினியாக அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். பல யூட்யூப் பேட்டிகளில் அவர் பங்கு எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் சாராவையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு ஏன்? விளம்பரங்களிலும் கூட இவருடன் சாரா பங்கு பெற்று நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அர்ச்சனா தனது மகள் குடும்ப பிரச்சனைக்கு சுமூகமாக வழி கண்டதை குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் கணவரும் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை. விவாகரத்து செய்து கொள்வோம் என்றெல்லாம் நாங்கள் முடிவு செய்திருந்தோம்.

குடும்ப பிரச்சனை:

இந்த விஷயங்கள் அனைத்தையும் எனது மகள் சாரா அறிந்திருந்தார். எனவே அவர் நீங்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு போன் பேசிக்கொள்ள கூடாது எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விதிமுறை போட்டார்.

அதன்படி நாங்களும் ஒருவரை ஒருவர் ப்ளாக் செய்து கொண்டோம். வாட்ஸ் அப்பிலும் பேசுவது கிடையாது என்று இருந்த பொழுது, இடையில் நான் ஒரு முறை எனது கணவருக்கு போன் செய்ய நினைத்தேன். ஆனால் அதை உறுதியாக மறுத்து விட்டாள் சாரா.

அந்த ஒரு வாரத்தில்தான் எங்களால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாது என்பதை நானும் எனது கணவரும் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணமே எனது மகள் சாராதான் என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் வி.ஜே அர்ச்சனா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam