அவ மேல எந்த தப்பும் இல்ல.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. மணிமேகலை விஷயத்தில் அடுத்த குண்டை போட்ட வி.ஜே பாவனா.!

கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் மிகப் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வரும் நிகழ்ச்சிதான்  குக் வித் கோமாளி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை இதுவரை தமிழில் வந்த சமையல் நிகழ்ச்சிகளிலேயே வித்தியாசமான நிகழ்ச்சி என்பதால் அதற்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.

அவ மேல எந்த தப்பும் இல்ல

துவங்கிய முதல் சீசனில் இருந்தே இந்த குக் வித் கோமாளியில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருபவர் மணிமேகலை. ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை நன்றாகவே நகைச்சுவை செய்யக்கூடியவர் என்பதால் அவருக்கு குக் வித் கோமாளியில் வாய்ப்புகள் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி வைத்துக் கொண்டார் மணிமேகலை. தற்சமயம் மணிமேகலை ஐந்தாவது சீசனில் மட்டும் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த வேலையில் இருந்து விலகி இருக்கிறார் மணிமேகலை. தனக்கு தனது சுயமரியாதைதான் முக்கியம் என்றும் ஏற்கனவே குக்காக இருக்கும் தொகுப்பாளர் ஒருவர் தன்னிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதால் அதிலிருந்து விலகி இருப்பதாக கூறி இருந்தார் மணிமேகலை

ரொம்ப கஷ்டமா இருக்கு

இந்த நிலையில் இதற்கு முன்பே வி.ஜே பாவனாவும் இதே போல பிரியங்கா கொடுத்த தொல்லையின் காரணமாக விஜய் டிவியில் இருந்து விலகியதாக கூறியுள்ளார் என்று ஒரு கருத்து வெளியானது. ஒரு ஆங்கில கட்டுரையில் இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த வி.ஜே பாவனா கூறும் பொழுது நான் எந்த இடத்திலும் அப்படி கூறியது கிடையாது. அது உண்மை என்றால் அந்த பேட்டியை அவர்களை காட்ட சொல்லுங்கள். நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விருப்பத்துடன் தான் வெளியேறினேன்.

குண்டை போட்ட வி.ஜே பாவனா

எனது கணவருக்கு நிறைய தொழில்கள் இருக்கின்றன அவற்றை நடத்துவதற்கு ஆள் பற்றாக்குறையாக இருந்தது அதன் காரணமாக நானே விருப்பப்பட்டு தான் எனது தொகுப்பாளர் தொழிலை விட்டுவிட்டு வந்தேனே தவிர வேறு யாருக்கும் இதில் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் வி.ஜே பாவனா.

மேலும் வி.ஜே பிரியங்கா தன்னிடம் எந்த வகையிலும் தவறாக நடந்து கொண்டதோ மோசமாக இருந்ததோ கிடையாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே வி.ஜே பிரியங்காவிற்கு நிறைய எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் வி.ஜே பாவனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version