48 வயது தொழிலதிபரை மறுமணம் செய்யும் தொகுப்பாளினி DD..!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபலமாக துவங்கியது முதலே தொலைக்காட்சிகளில் வி.ஜேவாக பணிபுரிபவர்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கி இருக்கிறது.

மேலும் பலரும் வி.ஜே ஆவதற்கு முயற்சி செய்வதற்கும் சிவகார்த்திகேயன் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஏனெனில் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாவதற்கான வாய்ப்பு வி.ஜேவாக இருப்பவர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறலாம்.

அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தமிழில் உள்ள வி.ஜேக்களில் முக்கியமானவர் என்று கூறலாம். சிவகார்த்திகேயன் இருந்த சமகாலத்தில் விஜய் டிவியில் பணிப்புரிந்தவர் திவ்யதர்ஷினி. இவரை பொதுவாக அனைவரும் டிடி என்று அழைப்பார்கள்.

நடிகர் சிம்புதான் இவருக்கு டிடி என்கிற பெயரை வைத்தார் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நடிகையாக சினிமாவிற்குள் அறிமுகமானார் திவ்யதர்ஷினி. நல தமயந்தி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் அறிமுகம்:

ஆனால் அவருக்கு சினிமாவின் மீது அவ்வளவாக இஷ்டம் இருக்கவில்லை. அதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரையில் வாய்ப்பு தேட தொடங்கினார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2014 ஆம் ஆண்டில் இவர் காபி வித் டிடி என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி இவருக்காக மட்டுமே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நிகழ்ச்சியின் பெயரிலேயே இவர் பெயரும் இடம் பெற்று இருக்கும் அளவிற்கு இவர் முக்கியமான ஒரு தொகுப்பாளராக மாறினார்.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் டிடிக்கு பெரும் அங்கீகாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் போல இவரும் ஒரு பிரபலம் என்றுதான் கூற வேண்டும். அதன் பிறகு அன்புடன் டிடி என்கிற இன்னொரு ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

சீரியல்களிலும் வரவேற்பு:

இவரது சகோதரியான ப்ரியதர்ஷினியும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார். அதேபோல சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார் ராஜ் டிவியில் ஒளிபரப்பான றெக்கை கட்டிய மனசு என்கிற தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த நாடகத்தின் கதையையே மாற்றி அமைக்கும் ஒரு கதாபாத்திரமாக இவருடைய கதாபாத்திரம் என்பது முக்கியமாக கதாபாத்திரமாக இருந்தது. பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இந்த சீரியலை இயக்கி இருந்தார். இப்போதும் கூட டிடி தொடர்ந்து நிறைய நிகழ்வுகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

நிறைய இசை வெளியீட்டு விழாக்களிலும் விருது வழங்கும் விழாக்களிலும் இவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பார்க்க முடியும் தற்பொழுது அவருக்கு 38 வயதாகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இந்த நிலையில் டிடி கேரளாவை சேர்ந்த விவாகரத்து ஆன தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

இந்த தொழில் அதிபருக்கு டிடியை விட 10 வயது அதிகம் என்றும் கூறப்படுகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version