அடக்கடவுளே.. மறுபடியுமா..? – எல்லாம் பணத்துக்கு தான்..! VJ மகாலட்சுமி வெளியிட்ட தகவல்..! – ரசிகர்கள் அதிர்ச்சி.!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான VJ மகாலட்சுமி வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. சின்னத்திரை நடிகையாகவும் தொகுப்பாளனியாகவும் அறியப்படும் விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையை பயணத்தை தொடங்கியவர்.

அதன் பிறகு, சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளரும் பிக் பாஸ் விமர்சகரான ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையில் விவாகரத்து பெற்றார் VJ மகாலட்சுமி. கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ரவீந்தர் சந்திரசேகரன்-ஐ திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்கு பிறகு தன்னோட மகனுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டில் சிங்கிள் மதராக வாழ்க்கை நடத்தி வந்த நடிகை VJ மகாலட்சுமி விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அப்போது தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுடன் மகாலட்சுமிக்கு காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து திருப்பதியில் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர்கள் அவ்வப்போது தங்களுடைய ரொமாண்டிக புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள். தாங்கள் அவுட்டிங் செல்லும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீட்டில் இருக்கும்போது எடுக்கப்பட்ட ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் இருவரும் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நட்சத்திர தம்பதியாக பார்க்கப்படுகிறார்கள்.

வெறும் பணத்துக்கு தான்..

இந்நிலையில், VJ மகாலட்சுமி வெளியிட்ட ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இத்தனை நாட்களாக இது VJ மகாலட்சுமி தான் என்று அவரை நம்பி பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்திருகின்றனர்.

காரணம், VJ மகாலட்சுமி பெயரில் இயங்கி வந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு போலியானது என அறிவித்திருக்கிறார் VJ மகாலட்சுமி. வேறு யாரோ ஆசாமி ஒருவர் வெறும் பணத்துக்காக VJ மகாலட்சுமி பெயரில் அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் சரியான தேதி நேரம் வாரியாக வெளியிட்டு அது உண்மையான கணக்கு போல செட்டப் செய்திருந்தார்.

ஆனால், அந்த கணக்கிலிருந்து ரசிகர்களுக்கு நான் ஒரு பிரச்சனையில் இருக்கிறேன் எனக்கு பணம் வேண்டும் 50 ஆயிரம் வேண்டும் 1 லட்சம் வேண்டும் என்று ரசிகர்களுக்கு மெசேஜ்கள் வந்திருக்கின்றது.

இதனால் அதிர்ச்சியான VJ மகாலட்சுமி ரசிகர்கள் இது நிஜமாகவே உண்மையான கணக்கு தானா..? என்று சந்தேகத்தின் பேரில் VJ மகாலட்சுமியிடம் புகார் அளிக்க அவர் உடனடியாக இது போலியான கணக்கு என பதில் அளித்து இருக்கிறார்.

ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தற்போது திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி அமைதியாக சென்று கொண்டிருக்கும் VJ மகாலட்சுமி வாழ்க்கையில் மறுபடியுமா..? என்று கேட்பது போல இப்படி ஒரு சிக்கல் எழுந்து இருக்கிறது.

உஷார்..

இந்த சம்பவம் ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. அதேபோல பிரபலங்கள் பெயரில் இயங்கக்கூடிய பல கணக்குகள் போலியானவை. எனவே, இதன் மூலம், அப்படி பிரபலங்கள் தங்களிடம் பண உதவி கேட்கும் பொழுது பிரபலங்கள் தான் நம்மிடம் கேட்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் அனுப்பக்கூடிய வங்கி கணக்கில் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக செயலிகளுக்கோ பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்று ரசிகர்களுக்கு எச்சரிக்கப்படுகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …