Site icon Tamizhakam

அமலாக்கதுறை பிடியில் கணவர்.. VJ மகாலட்சுமி கொண்டாட்டம்.. என்ன கொடுமை இது.. வைரலாகும் வீடியோ..!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக எல்லோரும் ஜோடிகளாக வி.ஜே மகாலட்சுமியும் அவரது கணவரான ரவீந்தர் சந்திரசேகரனும் இருந்து வருகின்றனர். ரவீந்தர் சந்திரசேகர் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அது முதலே சமூக வலைதளங்களில் பிரபலமான ஒரு ஜோடியாக இவர்கள் மாறி இருக்கின்றனர். வி.ஜே மகாலட்சுமி இதற்கு முன்பு அணில் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் இருக்கிறார்.

முதல் விவாகரத்து:

அதற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்த மகாலட்சுமி அதற்கு பிறகு ரவீந்தர் சந்திரசேகரனை திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் சந்திரசேகரை விட வி.ஜே மகாலட்சுமி வயது குறைவானவர்.

மேலும் பார்ப்பதற்கு அவர் மிகவும் அழகாக இருப்பார். அதனாலயே பலரும் இந்த ஜோடிகளை கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த நெட்டிசன்களுக்கு பதிலளிப்பதற்காகவே சமூக வலைதளங்களில் பேச துவங்கினர் இந்த ஜோடிகள். பிறகு அவர்கள் அதிக பிரபலமாகவே தொடர்ந்து நிறைய யூடியூப் சேனல்கள் அவர்களை பேட்டி எடுக்க தொடங்கினர்.

முக்கியமாக போன முறை பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பொழுது தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ரவீந்தர் சந்திரசேகரன் பிக் பாஸ் குறித்த தனது கருத்தை முன்வைத்துக் கொண்டே இருந்தார். அதற்கு அதிக வரவேற்புகளும் கிடைத்து வந்தன.

தொடர்ந்து சர்ச்சை:

அந்த அளவிற்கு இவர்கள் பிரபலம் அடைந்து வந்தனர். இதற்கு நடுவே அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் ஒரு பக்கம் பரவி வந்து கொண்டிருந்தன. பிறகு இல்லை நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை என்று அந்த வதந்திக்கும் இவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் ரவீந்திர் சந்திரசேகரன் தற்சமயம் அமலாக்கத்துறை பிரச்சனையில் சிக்கி இருந்து வருகிறார். இந்த நிலையில் வி.ஜே மகாலட்சுமி தனது நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

தற்சமயம் இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் கணவர் இப்படியான நெருக்கடியில் சிகிக் கொண்டிருக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய நாயின் பிறந்தநாளை இப்படி கொண்டாடி இருக்கிறாரே வி.ஜே மகாலட்சுமி என்று பலரும் இதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இதற்கு நடுவே தங்களது நாயின் பிறந்த நாளை முன்னிட்டு பல நாய்களுக்கு உணவளித்ததற்காக வி.ஜே மகாலட்சுமி ஒரு பக்கம் பாராட்டியும் வருகின்றனர்.

Exit mobile version