விஜே வாக பணியாற்றிய மகாலக்ஷ்மி அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஏற்கனவே இவருக்கு திருமணம் ஆன நிலையில் ஒரு மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் முதல் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த மகாலட்சுமி திடீரென ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அவர் வெளியிட்ட செய்தியில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக ரவீந்தரை காதலித்து வருவதாகவும் தன் பெற்றோர்களுடன் அனுமதியை பெற்ற பின் இருவரும் முடிவு செய்து தற்போது பெரியவர்களின் ஆசியோடு திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இன்னும் ட்ரெண்டிங் தம்பதிகளின் வரிசையிலிருந்து இவர்கள் விலகவே இல்லை. அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்பிவிட்ட இவரது திருமணத்தினால் ஏகப்பட்ட சர்ச்சைகள் ஏற்பட்டது.
இதற்கெல்லாம் தக்க பதில் கொடுக்கும்படி ரவீந்தர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும், நிதானமாகவும் பதில் அளித்த விதம் பாராட்டுக்குரியது. மேலும் அவர் உருவத்தை வைத்து கிண்டல் பண்ணியதோடு இல்லாமல் அவரை Fat மேன் என்ற பெயரிலேயே அழைத்தார்கள்.
திருமணத்திற்குப் பின்னால் இவர்கள் அலப்பறைகள் அளவிலடங்காதது. இவர் என்னமோ நயன்தாரா போலவும் ரவீந்தர் என்னமோ விக்கி போலவும் மகாலக்ஷ்மி செய்த சேட்டைகளை விரல் விட்டு எண்ண முடியாது.
திருமணத்திற்கு பின்பு போட்டோ ஷூட் என அனைத்திலும் இவர்கள் நயன்தாராவை ஃபாலோ பண்ணி இருக்கிறார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு ஓவராக தான் எல்லாத்தையும் செய்தார்கள்.
எந்த சர்ச்சைகளையும் பெரிதாக கண்டுகொள்ளாத இவர்கள் தற்போது தலை தீபாவளியை கொண்டாடக்கூடிய சூப்பர் நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.
இதையடுத்து பலர் தலை தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் என்று இவர்களைப் பார்த்து கேட்டு வருகிறார்கள் இவர்களும் அதற்கான பதிலை சாமர்த்தியமாக கூறிக்கொண்டு வருகிறார்கள்.
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இருக்கக்கூடிய நிலையில் இவர்கள் தலைதீபாவளி டென்ஷன் வெடிக்குமா அல்லது புஷ்பம் போல் என்று ஆகுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.