கணவருக்கு வார்னிங் கொடுத்த விஜே மகாலட்சுமி.. தீயாய் பரவும் விவாகரத்து தகவல்..!

பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தாகி மீண்டும் யாருக்கும் தெரியாமல் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

இவருக்கு எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்திரரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விஷயம் பலர் மத்தியிலும் பலவிதமான கலவை ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

வி ஜே மகாலட்சுமி..

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக குடித்தனம் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: தவறான உறவுக்கு அழைத்த டைரக்டர்.. யாரு தெரியுமா..? ரகசிய ரிப்போர்ட்..!

இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அடுத்து பிரபலமான ஜோடிகளால் மாறிய இவர்கள் பல தனியார் youtube சேனல்களுக்கு பேட்டியை கொடுத்து அசத்தினார்கள். அதிலும் இந்த ஜோடிகளை பற்றி ஜோடி பொருத்தம் பற்றி பேசுகையில் எழுந்த கருத்துக்களுக்கு பொறுமையாக ரவீந்தர் சந்திரசேகர் பதிலளித்திருந்தார்.

சின்னத்திரையில் விஜேவாக அறிமுகம் ஆகி அதனை அடுத்து பல சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்த விஜே மகாலட்சுமி சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

கணவனுக்கு கொடுத்த வார்னிங்..

அந்த வகையில் இவரும் இவர் கணவரும் அடிக்கடி சோசியல் மீடியாவில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வைரலாவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் ரவீந்தர் சில நாட்களுக்கு முன்பாக தனியாக நிற்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இதில் நேசிப்பாதற்காகவே வாழ்கிறோம். கஷ்டமான நேரத்தில் சிரியுங்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த தகவலை பார்த்த பல ரசிகர்கள் ரவீந்தர் மகாலட்சுமியோடு சண்டை போட்டு விட்டாரா? இல்லை இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற போகிறார்களா? என்பது போன்ற பல்வேறு விதமான கமெண்ட்களை அதிகளவு போட்டதோடு மட்டுமல்லாமல் பல கேள்விகளையும் எழுப்பி இருந்தார்கள்.

இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்களா? என்பது போன்ற விஷயங்கள் இணையத்தில் தீயாய் பரவி வந்தது. அந்த கேள்விக்கு பதிலடி கொடுக்கக்கூடிய வகையில் தற்போது விஜே மகாலட்சுமி ஒரு பதிவினை பதிவிட்டு இருக்கிறார்.

விவாகரத்து தகவல்..

மகாலட்சுமி பதிவிட்ட பதிவில் ரவீந்திரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து டேய்.. புருஷா.. எத்தனை முறை உன்னிடம் தனியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிடாதே என சொல்லி இருக்கிறேன்.

இதையும் படிங்க: ரகுவரனுக்கு NO சொன்ன நடிகை அமலா.. என்ன காரணம்ன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப்போடும்..!

இப்ப பாரு நம்ம ரெண்டு பேருமே பிரேக் அப் பண்ணிட்டாங்கனு நெனச்சுக்கிட்டு பல செய்திகளை போட்டு வம்படியா வம்புக்கு இழுக்கிறாங்க.

இதெல்லாம் தேவையா? என்பது போல பதிவினை பதிவிட்டு விவாகரத்து பற்றி தீயாய் பரவிய விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு தன் கணவருக்கு வார்னிங் கொடுப்பது போல அவரது செயல் இருந்தது என சொல்லலாம்.

இந்த விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவி வருவதோடு அட அப்ப அது இல்லையா? என்று அவர்கள் நக்கலாக சிரித்த வண்ணம் இவர்கள் இருவரையும் வழக்கம் போல கலாய்த்து இருக்கிறார்கள். மேலும் இந்த விஷயம் காட்டு தீ போல பரவி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version