திடீர்ன்னு நடுராத்திரியில் எழுப்பி ரவீந்தர் செய்த செயல்.. கதறி அழுதேன்..

முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக வந்து ரசிகர்களை கவர்ந்தவர்தான் VJ மகாலட்சுமி. தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதிலும் தன் திறமையை நிரூபித்தார்.

VJ மகாலட்சுமி

யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்களில் VJ மகாலட்சுமி நடித்திருக்கிறார். அதிலும் பெரும்பாலான சீரியல்களில் வில்லி கேரக்டரில்தான் VJ மகாலட்சுமி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் ரவீந்தர்

இவர் கடந்த 2022ம் ஆண்டில் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து, திருப்பதியில் திருமணம் செய்துக் கொண்டார். மிகுந்த கனத்த உருவமும், கருமையான நிறமும் கொண்ட அவரை, சீரியல் நடிகையாக VJ மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினர்.

இதையும் படியுங்கள்: ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!

உணர்வுகளால்

ஆனால் நாங்கள் உடல் அழகை தாண்டி உள்ளங்களால், உணர்வுகளால் இணைந்தவர்கள். அதனால் எங்கள் வாழ்க்கை உணர்வுகளால் மிக அழகானதாக இருப்பதை உங்களால் புரிந்துக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது என இருவரும் பதில் அளித்திருந்தனர்.

அவர்கள் திருமணம் செய்துக்கொண்ட சில மாதங்களுக்கு அவர்களது புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகின. அடிக்கடி டிவி சேனல்களில், யூடியூப் சேனல்களில் அவர்களது நேர்காணல்கள் அடிக்கடி நடத்தப்பட்டு, பெரிய அளவில் அவர்கள் கவனிக்கப்பட்டனர்.

பண மோசடி வழக்கில்…

இந்நிலையில் பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி ரவீந்தர் சிறை சென்று திரும்பினார். அதன்பிறகு அவர்கள் தங்களது சோஷியல் மீடியல் ஆக்டிவ்வை வெகுவாக குறைத்துக்கொண்டனர்.

இப்போது VJ மகாலட்சுமியின் பிறந்த நாள் வந்துள்ளது. அப்போது அவரது அம்மா, அண்ணன் ஆகியோர் கேக் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி, அவரை வாழ்த்தி இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: சின்ன பசங்க.. அஞ்சு பேரு.. மனசாட்சி உறுத்துச்சு.. ஆனால்..” புவனேஸ்வரி ஓப்பன் டாக்..!

மறுநாள் ஆதரவற்றவர்கள், முதியவர்களுக்கு VJ மகாலட்சுமியே நேரில் சென்று உணவு வழங்கி இருக்கிறார்.

நள்ளிரவு 12 மணிக்கு

இதில் VJ மகாலட்சுமியின் காதல் கணவர் ரவீந்தர், நள்ளிரவு 12 மணிக்கு அவருக்கு என ஸ்பெஷல் கேக் ஆர்டர் செய்து வைத்திருந்து, தூங்கிக்கொண்டு இருந்த VJ மகாலட்சுமியை எழுப்பி, அந்த கேக்கை தந்து தனது காதலுடன் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார்.

கதறி அழுதேன்

திடீர்ன்னு நடுராத்திரியில் எழுப்பி ரவீந்தர் செய்த அந்த செயலால், தன் மீது மிகுதியான அன்பு காட்டும் கணவரை பார்த்து சந்தோஷத்தில் கதறி அழுதேன் என்று VJ மகாலட்சுமி கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version