“நீ பண்ணா.. செத்துப்போனது கூட எந்திரிச்சிடும்..” இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.. VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர்..!

இப்போதெல்லாம் சாப்பிடும் விஷயத்தில் பலரும் கூச்சமோ, தயக்கமோ காட்டுவதே இல்லை. அதுவும் சிலர் சாப்பாட்டு பிரியர்களாக ஓட்டல், ஓட்டலாக சென்று சாப்பிட துவங்கிய பிறகும், வீடுகளிலேயே கிலோ கணக்கில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி சமைத்து சவால் விட்டு சாப்பிடும் வீடியோக்களும் அதிகரித்துள்ள நிலையில், இது சங்கோஜப்படும் ஒரு விஷயமே இல்லை என்றாகி விட்டது.

சினிமா நடிகர், நடிகைகளை பொருத்த வரை சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஏனெனில் சுவர் இருந்தால்தான் சித்திரம். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரித்து பாதுகாத்தால்தான் அவர்களால் படங்களில் தங்கு தடையின்றி நடிக்க முடியும். பல கோடிகளில் சம்பளத்தை அள்ள முடியும்.

வெந்நீர் வைக்க தெரியாது

அதே நேரத்தில் சினிமாவில், சீரியலில் நடிக்கும் சில நடிகைகள், சமையல்கட்டில் அடுப்பு பற்ற வைத்து, வெந்நீர் கூட வைக்க தெரியாது என்பதுதான் கசப்பான உண்மை.

வீடுகளில் அம்மா, மாமியார் அல்லது சமையல்கார பெண் சமைத்து வைக்கும் ருசி ருசியான சைவ, அசைவ வகைகளை ஒரு பிடி பிடிப்பார்கள். அல்லது பெரிய பெரிய ஓட்டல்களுக்கு சென்று வயிறு முட்ட சாப்பிடுவார்கள். மற்றபடி சமைக்க தெரிந்தவர், அதுவும் ருசியாக சமைக்க தெரிந்த நடிகைகள் மிக மிக மிக குறைவுதான்.

VJ மகாலட்சுமி

டிவி சீரியல்களில் நடித்து மிக பிரபலமானவர் VJ மகாலட்சுமி. மிக அழகான தோற்றம் கொண்ட இவர், தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

சிவந்த உடல் நிறமும், கட்டழகான உடல் தோற்றமும், பார்த்தவுடன் அழகால் வசீகரிக்கிற VJ மகாலட்சுமி, கனத்த பெரிய உருவத்துடன், மிக உயரமாக உள்ள ரவீந்தரை திருமணம் செய்தது குறித்து பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகரை கட்டி அணைத்த பானுமதி.. மூச்சு விட முடியாமல் கதறிய நடிகர்..!

வெளிநாட்டில் தேனிலவு

எனினும் அதை எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் இந்த நட்சத்திர தம்பதி, ஜாலியாக இருந்தனர். வெளிநாட்டில் தேனிலவு கொண்டாடினர். டிவி சேனல்கள், யூடியூப் சேனல்களில் அடிக்கடி கலந்துக்கொண்டனர். இதில் தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதலை, அன்பை, நெருக்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் ரவீந்தர், VJ மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ரவீந்தர் கூறியதாவது,

மகாலட்சுமி நன்றாக சாப்பிடக்கூடியவர். ஆனால் அவருக்கு சமைப்பது என்பது அந்த அளவுக்கு தெரியாது.

மட்டன் பிரியாணி செய்யட்டுமா?

ஒரு முறை மட்டன் பிரியாணி செய்யட்டுமா..? என்று என்னிடம் கேட்டார். இன்னைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் நான் மட்டன் பிரியாணி செய்கிறேன் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: வற்புறுத்தி கல்யாணம் பண்ண டைரக்டர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை..!

அப்போது நான் தயவு செய்து நீ செய்யாதே.. நீ பிரியாணி பண்ணா செத்துப் போன ஆடு உயிர் வந்து குக்கரை தட்டி எந்திரிச்சு ஓடிவிடும். அந்த அளவுக்கு மோசமாக சமைப்பாய் என்று கூறினேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கலகலவென பேசியிருக்கிறார் VJ மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர்.

எந்திரிச்சு ஓடிடும்

நீ பிரியாணி பண்ணா.. செத்துப்போன ஆடு கூட எந்திரிச்சி ஓடிடும் என்று, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பிரியாணி செய்வதாக கூறிய VJ மகாலட்சுமியை பயங்கரமாக கலாய்த்திருக்கிறார் அவரது கணவர் ரவீந்தர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version