பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான VJ மகாலட்சுமி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ததை தொடர்ந்து சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்களுடைய தேன் நிலவை கொண்டாடிய இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றிய முன்னாள் தொகுப்பாளனியான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் அவர் தயாரித்து வந்த ஒரு திரைப்படத்தில் நடிகையாக ஒப்பந்தமான இவர் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரையே திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்.
இவர்களுடைய திருமணம் கிட்டத்தட்ட ஒரு வாரம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக இருந்தது வீஜே மகாலட்சுமியின் கணவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் திரைத்துறை சார்ந்த பல்வேறு சர்ச்சைகள் குறித்து தன்னுடைய பார்வையையும் தன்னுடைய கருத்தையும் வைத்து ரசிகர்கள் மத்தியில் ஃபேட் மேன் என்று பிரபலமானவர்.
இது குறித்து சமீபத்தில் வீஜே மகாலட்சுமி கூறியதாவது நாங்கள் ஒன்றும் திடீரென திருமணம் செய்து கொள்ளவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம்.
இந்நிலையில் தான் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறோம் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என சமீபத்தில் மகாலட்சுமி சில பதிலடிகளை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்களுடைய தேன் நிலவே கொண்டாடிய இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது