ஆரம்பிக்கலாங்களா… திருமணதிற்கு பிறகு ஹோட்டலில் நடிகருடன் VJ மஹாலட்சுமி..!

கொழுக் மொழுக் அழகில் பப்லியான தோற்றத்தில் புசுபுசுவென ஃபன் போன்ற கண்ணம் வைத்துக் கொண்டு பவ்யமான சீரியல் நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இல்ல தரிசிகளிடையே மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் விஜே மகாலக்ஷ்மி .

விஜே மகாலக்ஷ்மி:

சீரியல் நடிகை ஆன இவர் அழகான தோற்றம், பொம்மை போல் வசீகரிக்கும் அழகைக் கொண்டு இருந்தாலும் சர்ச்சைக்குரிய நடிகையாகவே பார்க்கப்பட்டு வந்தார்.

முதன் முதலில் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்னர் இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் .

ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர துவங்கியதை அடுத்து சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து முன்னணி சீரியல் நடிகை என்ற இடத்தை பிடித்து விட்டார்.

90ஸ் தொகுப்பாளினி:

ஆரம்பத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வந்த மகாலட்சுமி சீரியல்களில் நடிக்க தொடங்கியதற்கு பின்னர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்து வெளுத்து வாங்கி வந்தார்.

இவர் ஹீரோயினாக நடிப்பதை விட வில்லி கேரக்டர்களுக்கு பக்காவாக பொருந்தினார். இவரது நடிப்பில் வெளிவந்த வாணி ராணி ,செல்லமே, உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை உள்ளிட்ட சீரியல்கள் நல்ல அடையாளத்தை கொடுத்தது.

சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த மகாலக்ஷ்மி பீக்கில் இருந்த போதே அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. கணவர் குழந்தை என குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த விஜே மகாலட்சுமி சீரியல்களில் தன்னுடன் நடிக்கும் ஹீரோவுடன் மிக நெருக்கமாக நடித்து வந்தார்.

சீரியல் நடிகருடன் கள்ளஉறவு:

இதில் பழக்கம் ஏற்பட்டு பிரபல சீரியல் நடிகர் ஆன ஈஸ்வர் என்பவரிடம் தகாத உறவு வைத்துக் கொண்டிருந்தார் மகாலக்ஷ்மி.

நடிகர் ஈஸ்வர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பவர். இவர்களின் இந்த கள்ள உறவினால் மனைவியை பிரிந்தார்.

ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ அதிரடியாக மகாலட்சுமி மீது பெரும் புகார்களை அடுக்கடுக்காக கூறி விமர்சித்தார் .

இதனால் மகாலட்சுமி மிக மோசமானவராக பார்க்கப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை எடுத்து ஈஸ்வர் உடனான தனது உறவை துண்டித்துக் கொண்டார் மகாலட்சுமி .

ரவீந்திரன் உடன் மறுமணம்:

பின்னர் சீரியல்களில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்த மகாலட்சுமி பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார் .

இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியது. காரணம் ரவிந்தர் மிகப்பெரிய பணக்காரர் .

அது மட்டும் இல்லாமல் உடல் பருமனுடன் கூடிய ஒரு நபர். பொருத்தமே இல்லாத இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆனால் அதையெல்லாம் விஜே மகாலட்சுமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ரவீந்தர் சொத்து பிரச்சனை மற்றும் பண மோசடி உள்ளிட்ட உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி கைது செய்யப்பட்ட போது கூட மகாலட்சுமி சீரியல், விளம்பரங்களில் நடித்து மகிழ்ச்சியான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

சீரியல் நடிகருடன் ஹோட்டலில்….

இப்படியான நேரத்தில் விஜே மகாலட்சுமி தற்போது தாயம்மா என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் சூட்டிங் போது நடிகர் வினோத் உடன் ஹோட்டலில் சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மகாலக்ஷ்மியை கண்டபடி விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அடுத்த நபர் இவரா? என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version