தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது திரை வாழ்க்கையை துவங்கியவர் தான் மகேஸ்வரி சாணக்கியன் .
இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமாக இருந்தார். குறிப்பாக விஜய் டிவி ஜீ தமிழ் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கியுள்ளார் .
VJ மகேஸ்வரி:
இசையருவி, அதிர்ஷ்ட லக்ஷ்மி, நகைச்சுவை கில்லாடிகள் ,பெட்டார் ஆப் மற்றும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இதனிடையே சிறப்பு விருந்தினராகவும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார் .இதன் மூலம் அவர் விஜேவாக பிரபலமாக இருந்து பின்னர் திரைப்பட வாய்ப்பையும் பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
விஜி மகேஸ்வரி தனது சமூக வலைதளங்கள் எப்போதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கட்டழகு தோற்றத்தை காட்டி போஸ் கொடுத்து எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பார்.
இவரது கவர்ச்சி அழகுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராமில் இருந்து வருகின்றனர். இதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பே கிடைத்தது.
கவர்ச்சிக்கு கிடைத்த பிரபலம்:
பிக் பாஸ் இன் மூலம் பிரபலமான விஜே மகேஸ்வரிக்கு அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
இதனிடையே சோல்மேட் உள்ளிட்ட குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த திரைப்படமான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக விஜே மகேஸ்வரி நடித்திருந்தார்.
தற்போது 34 வயதாகும் விஜய் மகேஸ்வரி மிகவும் இளம் பருவத்திலேயே திருமணம் செய்து கொண்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிஜே மகேஸ்வரிக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இதனிடையே இவர்களது இவரது வாழ்க்கையில் கணவரால் மிகப்பெரிய தொல்லைகளையும் டார்ச்சர்களையும் அனுபவித்து வந்ததாக பல பேட்டிகளில் விஜே மகேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.
கணவரால் பட்ட கொடுமைகள்:
சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனது கணவர் என்னை மிகவும் அடிமையாக வைத்து நடத்தினார். அது மட்டும் இல்லாமல் நண்பர்களுடன் பழக கூடாது எந்த ஆண்களுடன் சேர்ந்து நடிக்கக்கூடாது.
விஜேவாக மட்டுமே இருக்க வேண்டும் என ரூல்ஸ் போட்டு என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். அது மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாக நான் அவருடன் மிகவும் கஷ்டப்பட்டேன்.
என்னுடைய அம்மாவுக்கு சின்ன உதவிகளை கூட அவர் செய்யக்கூடாது என்று கறாராக கூறுவார். அப்படியும் மீறி அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்துவிட்டால் என்னை அவர்களோடு அனுப்பி விடுவேன் என மிரட்டுவார்.
இதனால் என் அம்மா வீட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். என் அம்மா என்னை எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு படிக்க வைத்து வளர்த்திருப்பார்? அவர் வீட்டு வேலைக்கு செல்வது என்னால் பார்க்க முடியவில்லை.
சுதந்திரமான வாழ்க்கை:
இதே நான் இந்த நிலைமைக்கு ஆளாகினால் அவர் என்னை வீட்டு வேலைக்கு அனுப்புவாரா? என என் மனதிற்குள் தோன்றியது.
உடனடியாக நான் எனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு என் மகனுடன் தனிமையில் தற்போது மிகவும் சுதந்திரமாக நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்.
என் அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன் என பேட்டி ஒன்றில் உருக்கமாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்,
சமீபத்தில் ஹோம் டூர் நடத்தி அதன் தன்னுடைய வீட்டில் உள்ள பல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
குடிப்பதற்கு தனி அறை:
தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு சமைத்து சாப்பிடுவதற்காக வீட்டில் தனி சமையல் அறை வைத்திருக்கேன்.
அத்துடன் குளிர்சாதன பெட்டி , தனி இடம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் ஓப்பனாக கூறி இருக்கிறார் .
இந்த விஷயம் அனைவரையும் வாயடக்க வைத்துள்ளது . இதனை கேள்விப்பட்ட பலரும் விஜே மகேஸ்வரியை கடுமையாக விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள் . இதுதான் உங்களது சுதந்திரமான வாழ்க்கையா? என விமர்சித்துள்ளனர்.