நான் பொறந்தப்போ இருந்த மைண்ட்செட் என்ன..? மகனின் கேள்விக்கு VJ மகேஸ்வரி கொடுத்த ஷாக் பதில்..!

பொதுவாகவே தாய்மை என்பது ஒரு உன்னதமான நிலை. பெண்மையின் முழுமை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் விஜே மகேஸ்வரி பேட்டி ஒன்றில் தன் மகன் கேட்ட கேள்விக்கு நேர்த்தியான முறையில் பதில் அளித்திருக்கிறார்.

அப்படி அவரது மகன் என்ன கேள்வியை கேட்டார். அவர் என்ன பதிலை சொன்னார் என்பது பற்றி விரிவாக்கமும், விளக்கமாகவும் இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நான் பொறந்தப்போ இருந்த மைண்ட்செட் என்ன..

விஜய் மகேஸ்வரி ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இவர் ஸ்டார் விஜய்யின் பிரபலமான சோப்ரா புதுக்கவிதையில் காவியாவாக நடித்து பிரபலமானவர்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் இவர் 2022 – ஆம் ஆண்டு வெளி வந்த உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தி.நகரில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் 2010-இல் குறைந்த பட்ஜெட் திரைப்படமான குயில் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் ஜீ தமிழில் காமெடி கில்லாடி, பெட்டரா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

சின்னத்திரை பெரிய திரை மாடலிங் போன்ற அனைத்து துறைகளிலும் தடம் பதித்து இருக்கக்கூடிய இவர் மந்திரப்புன்னகை, சென்னை 28 பகுதி 2, பியார் பிரேமா காதல், டான், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 6-இல் கலந்து கொண்ட இவரிடம் அண்மையில் இவர்ஸதான் மகன் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.
அதில் இவர் கேட்ட கேள்வி நான் பிறந்த போது உன் மைண்ட் செட் எப்படி இருந்தது என்ற கேள்வி தான் ஹைலைட்டாக இருந்தது.

மகனின் கேள்வி..

மகன் தான் பிறந்த போது தன் அம்மாவின் மைண்ட் செட் எப்படி இருந்தது என்று கேட்ட கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத விஜே மகேஸ்வரி சிரித்த வண்ணம் அந்த கேள்விக்கு பதில் அளித்தார்.

அந்த பதிலில் அவர் பேசும் போது முதலில் தன் மகனை பெற்றெடுக்கும் போது வயதில் 21 மட்டும் இருந்ததால் அந்த சமயத்தில் தன்னை நம்பி தனக்கு ஒரு குழந்தை கிடைத்ததை எப்படி வளர்த்து ஆளாக்குவோம் என்று நினைத்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தன்னுள் பரவி இருந்ததாக சிரித்தபடியே மகனிடம் கூறியதை அடுத்து அவரது மகனும் தனது அழகான சிரிப்பை வெளிப்படுத்தி பலரது மனதையும் கொள்ளையடித்தார்கள்.

VJ மகேஸ்வரி கொடுத்த ஷாக் பதில்..

இந்த பதிலை யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தன் மகன் மீண்டும் தன் அம்மாவிடம் வேறொரு கேள்வியை கேட்டார். அதில் தானாக எந்த விஷயத்தையும் அவர் மகன் செய்ய வேண்டும் என்றால் அதில் விஜே மகேஸ்வரியின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது தான்.

இந்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய விஜே மகேஸ்வரி செய்கின்ற செயலிலோ அல்லது வேலையிலோ ஏற்படக்கூடிய சங்கடங்களை தீர்க்கக்கூடிய வழிகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம் அப்படி இருந்தால் எந்த பயமும் தனக்கு இல்லை என்று தன் மகனிடம் கூறினார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version