வயிற்றில் இருக்கும் Stretch Marks பளிச்சென காட்டி VJ மகேஸ்வரி சொன்னதை பாருங்க..!

தமிழில் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் மகேஸ்வரி. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் வரவேற்பை பெற்றவராக வி.ஜே மகேஸ்வரி இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து பிரபலமானதை அடுத்து அவரை போலவே பிரபலமாக வேண்டும் என பலரும் முயற்சி செய்து வந்தனர்.

அப்படிதான் வி.ஜே மகேஸ்வரியும் வெள்ளித்திரைக்கு வருவதற்கான முயற்சிகளை செய்ய துவங்கினார். முதன் முதலாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான புது கவிதை என்னும் சீரியலில் நடிகையாக அறிமுகமானார் மகேஸ்வரி. அந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

ஆனால் அதற்கு முன்பே 2010 ஆம் ஆண்டு குயில் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த சமயத்திலேயே சன் டிவியில் ஒளிப்பரப்பான அசத்தப்போவது யாரு தொடரில் கெஸ்டாக வந்திருந்தார் மகேஸ்வரி. அந்த சமயத்தில் எல்லாம் அவர் அவ்வளவாக வி.ஜேவாக பிரபலமாகவில்லை. ஆனால் அதற்கு பிறகு அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

திரைத்துறையில் அறிமுகம்:

அதற்கு பிறகு 2015 ஆம் ஆண்டுதான் புதுக்கவிதை தொடரில் நடித்தார். தொடர்ந்து தாயுமானவன் என்கிற தொடரிலும் மகாலெட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் அவ்வளவாக சீரியல்களில் நடிக்கவில்லை.

தொடர்ந்து தொகுப்பாளினியாக அவரது பயணத்தை துவங்கினார். இசை அருவி, காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் மாதிரியான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வி.ஜேவாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது வயிற்று பகுதியில் இருக்கும் ஸ்ட்ரெச்  மார்க்கோடு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் விஜே மகேஸ்வரி.

பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏழாவது மாதத்தில் இருந்து அவர்களுடைய வயிற்று பகுதி என்பது பெரிதாக துவங்கும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சி காரணமாக வயிற்றின் அளவு பெரிதாகிக் கொண்டே வரும்.

குழந்தை பிறப்பு:

குழந்தை பிறந்தவுடன் அந்த வயிற்றில் மெல்லிய கோடுகள் ஏற்படும். இதனை ஆங்கிலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் என்று கூறுவார்கள். சில பெண்கள் சிகிச்சை செய்தோ அல்லது வீட்டு மருத்துவத்தின் மூலமாகவோ இதனை சரி செய்ய பார்ப்பார்கள்.

ஆனால் சில பெண்கள் இதை ஒரு தாய்மையின் அடையாளமாக கருதுவதால் அதை அப்படியே விட்டு விடுவார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் அப்படியே இருக்கும். இதனை அவர்களது கணவர்களும் ஒரு அழகு குறைவாகவோ அல்லது அருவருப்பான விஷயமாகவோ பார்ப்பதில்லை.

எனவே இது குறித்து பெண்கள் கவலைப்படுவதில்லை அதே போல விஜய் மகேஸ்வரியும் அதைப்பற்றி கவலைப்படாமல் செல்பி எடுத்து பகிர்ந்ததோடு இந்த உலகத்தில் வேறு யாரும் நேசிக்காத அளவுக்கு உங்களை நீங்களே நேசிக்க பழகுங்கள் என்று கேப்சன் கொடுத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version