Site icon Tamizhakam

“உன் புருஷன் விட்*** இல்ல..” – மோசமாக பேசிய ரசிகருக்கு VJ மகேஸ்வரி பதிலடி..!

நடந்து முடிந்த ஆறாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் சீரியல் நடிகர் அஸீம். ஆனால் இந்த வெற்றி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

உச்சகட்டமாக தற்பொழுது அது தனி மனித தாக்குதலுக்கு வழிவகுக்கும் விதமாக இந்த சர்ச்சை வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அஸீம் வெற்றி பெற்றது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக சக பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன் தான் இந்த வெற்றிக்கு தகுதியானவர். ஆனால், அஸீம் இந்த வெற்றியாளர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவறானது என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விளையாட்டு போட்டியில் அரசியல் ரீதியான தாக்கங்களும் இருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சிகரமான உண்மையாக இருக்கிறது. ஒரு சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சி.

ஆனால் இது வெற்றி பெறுபவர் இவர்தான் வெற்றியாளர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக கூட கருத்துக்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருப்பது பொதுவான பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது.

உச்சகட்டமாக சக பிக் பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்ற அசிமுக்கு எதிரான சில கருத்துக்களை பதிவு செய்தார். இது அஸீம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து VJ மகேஸ்வரியை தனிப்பட்ட முறையில் தாக்க தொடங்கி இருக்கின்றனர் அஸீமின் ரசிகர்கள் சிலர். இன்னும் சொல்லப்போனால் அவருடைய விவாகரத்து மற்றும் அவருடைய மகன் போன்ற விஷயங்களை முன்னிறுத்தி பதிவில் ஏற்ற முடியாத அளவுக்கு கொச்சையாக நடிகையும் தொகுப்பாளனிமான மகேஸ்வரியை சில இணையவாசிகள் அஸீம் ரசிகர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உங்களுக்கு, அவர் கூறிய கருத்துக்கு மாற்று கருத்து இருக்கும் பொழுது அதனை நேர்மையான முறையில் கண்ணியமான முறையில் உங்களுடைய கருத்தை பதிவு செய்து அதற்கு பதிலோ அல்லது விளக்கமாக கொடுப்பது சரியான ஒரு கருத்து மோதலாக இருக்கும்.

ஆனால், இப்படி தனிப்பட்ட முறையில் ஒரு நபரை இழிவுபடுத்தும் விதமாக அவருடைய புகழை களங்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது முறையாகாது என்று சக பிக் பாஸ் ரசிகர்கள் VJ மகேஸ்வரிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த சச்சரவு கடந்த இரண்டு நாட்களாக இணை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், நடிகை VJ மகேஸ்வரி பொறுப்புடன் செயல்படுகிறார் என்பது தான் அவருடைய நடவடிக்கைகள் மூலம் பார்க்க முடிகிறது.

இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தன்னுடைய ரசிகர்கள் யாரும் அப்படியான தனிமனித தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்பது போலவும் VJ மகேஸ்வரி நடந்து கொள்கிறார்.

அவருக்கு ஆதரவாக சக இணைய வாசிகளும் பிக் பாஸ் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது தற்போதைக்கு ஒரு ஆறுதலான விஷயம். அரசியலாகட்டும்.. சினிமா ஆகட்டும்.. அல்லது ஏதாவது விளையாட்டு போட்டியாகட்டும்.. ஒருவரை நமக்கு பிடித்திருக்கிறது என்பதால் அவர் மீது எதிர் கருத்து கூறக்கூடியவர்களை காயப்படுத்தும் விதமாக எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யக்கூடாது என்பதை பலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றது.

அதே நேரம் தங்களைப் பற்றி இப்படி அவதூறான கருத்துக்கள் வரும் பொழுது பிரபலங்களும் VJ மகேஸ்வரி போல பொறுப்புடன் நடந்து கொண்டு அதற்கு உணர்ச்சிவசப்படாமல் அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Summary in English : The Bigg Boss show always tends to bring out the best and the worst out of its contestants. But recently, Azeem’s fans have taken it up a notch and are lashing out at fellow Bigg Boss contestant with words that are unfit for print. This has caused a lot of controversy, as many people feel that such behavior should not be tolerated and is indicative of a bigger problem within the fan base. It is evident that while some may be passionate about their favorite contestant, they should also respect others and refrain from making inappropriate comments online.

Exit mobile version