பட வாய்ப்பே இல்ல.. அப்புறம் எப்படி Luxury வாழ்க்கை வாழுறீங்க.. ரசிகரின் கேள்வி.. VJ மகேஸ்வரி பதில் என்ன..?

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே பிரபலமாக இருந்து வருபவர் நடிகை வி.ஜே மகேஸ்வரி இவரை இயற்பெயர் மகேஸ்வரி சாணக்கியன் என்பதாகும். தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார்.

இவர் சீனிவாசன் மற்றும் லதா தம்பதியினருக்கு பிறந்தவராவார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் படித்த மகேஸ்வரி அதன் பிறகு திரைத்துறையில் பயணிக்க துவங்கினார். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வெளியான குயில் என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அவருக்கு கொஞ்சம் வரவேற்பும் கிடைக்க துவங்கியது இந்த நிலையில் டிவி விளம்பரங்கள் சிலவற்றிலும் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வி.ஜே மகேஸ்வரி வளர்ச்சி:

தொடர்ந்து மாடலிங் துறையிலும் ஈடுபாடு காட்டி வந்தார் வி.ஜே மகேஸ்வரி. அதற்குப் பிறகுதான் அவருக்கு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 2013 ஆம் ஆண்டு டிவி சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார் மகேஸ்வரி.

புதுக்கவிதை என்கிற விஜய் டிவி சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தாயுமானவன் என்கிற விஜய் டிவி சீரியலிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரை வளர்த்து விட்டதில் விஜய் டிவி சேனலுக்கு அதிக பங்கு உண்டு எனக் கூறலாம்.

தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காமெடி கில்லாடிஸ் என்கிற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணிபுரிந்தார் மகேஸ்வரி. இதற்கு நடுவே நிறைய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகள்:

2010ல் வெளியான மந்திரப்புன்னகை, சென்னை 28 திரைப்படத்தின் இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சிவகார்த்திகேயன் நடித்த டான் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் மகேஸ்வரி.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித் திரையிலும் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்து வருகிறது இந்த நிலையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மகேஸ்வரி சமீபத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

சமீப காலமாக மகேஸ்வரி வெளியிடும் புகைப்படங்கள் அவரது சொகுசு வாழ்க்கையை வெளிகாட்டும் விதமாக இருந்து வருகின்றன. ஆனால் சமீப காலமாக அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளோ வரவேற்புகளோ அதிகமாக இருப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி கேட்ட ரசிகர் ஒருவர் உங்கள் வாழ்க்கையில் எப்படி இவ்வளவு லக்ஸரி விஷயங்கள் இருக்கிறது அப்படி என்னதான் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு வி.ஜே மகேஸ்வரி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version