இதனால தான் எனக்கு மாப்பிள்ளை கெடைக்கல.. VJ பார்வதி சொன்னதை கேட்டீங்களா..?

VJ பார்வதி ஆரம்ப காலத்தில் வீடியோ ஜாக்கியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் ஆங்கரிங், மாடலிங், சினிமா நடிகை என பன்முக திறமையோடு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து ஆனந்த விகடனில் பத்திரிக்கையாளராக வேலை பார்த்த விவரம் பலருக்கும் தெரியாது.

விஜே பார்வதி..

சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக பணி புரிந்த இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் புதுப்புது அர்த்தங்கள் எனும் சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மாதிரி தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவர் சொந்தமாக வைப் வித் பாரு என்ற You tube சேனலை துவங்கியதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்ததோடு இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

Youtube-ல் இவர் கலாட்டா நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனதற்கு காரணமே இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டுத்தான் அதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்களுக்கு டப் கொடுத்த விஜே பார்வதி தனக்கு ஏன் இன்றும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்ற விஷயத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

இதனால தான் எனக்கு மாப்பிள்ளை கிடைக்கல..

வெள்ளி திரையில் முதல் முதலாக ஹிப் ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் இவர் நடித்ததை அடுத்து ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளி வந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

 

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசர வைப்பார்.

இதில் குறிப்பாக அவர் உடல் அழகை பிட்டாக மெயின்டெயின் செய்யக்கூடிய ஒர்க் அவுட், குட்டை கவுன்களை அணிந்து கொண்டு இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை குட்டி மியாகலிபா என்று அழைப்பார்கள்.

விஜேபார்வதியின் ஓப்பன் டாக்..

இந்நிலையில் விஜே பார்வதி தனக்கு ஏன் திருமணமாகவில்லை என்ற விஷயத்தை பகிரங்கமாக உடைத்து இருக்கிறார் இந்த விஷயம் பற்றி பேசும் போது நான் மதுரை சேர்ந்த பெண் எனக்கு தற்போது 28 வயது ஆகிறது.

என் உறவினர்கள் அனைவரும் என்னுடைய நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு என் அம்மாவிடம் போன் பண்ணி உன் பொண்ணு இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்கா? இப்படி எல்லாம் பேசினா.. எப்படி மாப்பிள்ளை கிடைக்கும் என்று சொன்னார்கள்.

அவர்கள் என்ன நேரத்தில் சொன்னார்களோ தெரியவில்லை. இன்று வரை எனக்கு மாப்பிள்ளையே கிடைக்கவில்லை என்று தனது வேதனையை சிரித்த படியே வெளிப்படுத்தி அண்மை பேட்டியில் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இந்த காரணத்தால் தான் விஜே பார்வதிக்கு இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக அனைவரையும் திணற வைத்து வருகிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version