அம்மா என்னை மன்னிச்சிடு.. என் சந்தோஷம் எல்லாம் போச்சு.. கணவர் குறித்து VJ பிரியங்கா கண்ணீர்..!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சின்ன திரையில் விரும்பிப் பார்க்கின்ற நிகழ்ச்சிகளை அற்புதமாக தொகுத்து வழங்கிய விஜே பிரியங்கா தன் குறு குறு பார்வையாலும் குறும்பு பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தவர்.

ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் நுழைவதற்கு பல்வேறு வகையான கஷ்டங்களை சந்தித்து இன்று தனது உழைப்பின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கும் முன்னணி விஜே பிரியங்கா மக்கள் விரும்பும் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்கிறார்.

விஜே பிரியங்கா..

இவர் விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த பிறகு தான் அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்தது. இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகப் பெரிய ரீச்சை மக்கள் மத்தியில் இவருக்கு பெற்று தந்தது.

இதனை அடுத்து மாகாபாவின் அறிவுரைகளை கடைப்பிடித்து சினிமா காரம் காபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அசத்தினார். அது மட்டுமல்லாமல் ஒல்லி பெல்லி, சூப்பர் சிங்கர் ஜூனியர், கலக்கப்போவது யாரு, கிச்சன் சூப்பர் ஸ்டார், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் 6, 7, 8, 9 என பல சீசன் ஐ தொகுத்து வழங்கி நட்சத்திர தொகுப்பாளினியாக விளங்குகிறார்.

அது மட்டுமல்லாமல் டிஆர்பிஐ உச்சத்துக்கு கொண்டு போய் சேர்த்த தொகுப்பாளினிகளில் ஒருவராக இவர் மாறியதை அடுத்து இவரை முழு நேர தொகுப்பாளினியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைக்கு விஜய் டிவி வந்தது.

மேலும் பன்முகத்திறமையை பிரியங்கா பெற்றிருக்கிறார் மிகச் சிறப்பாக பேசும் திறமை இருப்பதோடு மட்டுமல்லாமல் பாடவும் ஆடவும் அவருக்கு மிக நன்றாக வரும் என்பதால் இன்று வரை அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்று சொல்லலாம்.

அம்மா மன்னித்துவிடு.. என் சந்தோசமே போச்சு..

மக்கள் மனதில் இடம் பிடித்த விஜே பிரியங்கா தன்னுடன் இணைந்து பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை காதலித்தார். அப்படி காதலிக்கும் போது இரு இல்லத்திலும் இவர்களுக்கு எதிர்ப்பு இருந்தது. எனினும் அவற்றை சமாளித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் ஆனதை அடுத்து அடிக்கடி இணைய பக்கங்களில் தனது கணவரின் புகைப்படங்களை வெளியிட்டு அவரைப் பற்றி பேசி வந்த விஜே பிரியங்கா தற்போது தன் கணவர் குறித்து எந்த ஒரு தகவலையும் சொல்லாமல் சைலன்டாக இருப்பதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்ற கதை ஓடி வருகிறது.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று பிரியங்காவின் அம்மா கண் கலங்க பேசியிருந்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் தன் மகள் செய்த தவறை இனிமேல் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தார்.

கணவர் குறித்து சொன்ன பிரியங்கா ..

மேலும் இன்று வரை தனக்கு பக்க பலமாக இருந்த அம்மாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கக்கூடிய விஜே பிரியங்கா எது நமக்கு சந்தோஷம் என்று நினைத்து நாடி போகிறோமோ அது சந்தோஷம் இல்லாமல் போகக்கூடிய சூழ்நிலைகள் அமைந்து விடுகிறது என்று நாசுக்காக தனது வாழ்க்கையைப் பற்றி கூறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழக்கூடிய வேளையில் விவாகரத்தை பெற்று விட்டார் என்பதை உறுதி செய்யக் கூடிய வகையில் இந்த பேச்சு இருந்தது என்று சொல்லலாம்.

இதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் மத்தியில் உச்சத்தை பெற்றிருக்கக் கூடிய பிரபலமான விஜே பிரியங்கா இந்த விஷயத்தில் இருந்து வெளி வர வேண்டும் என்பது போல ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

அத்தோடு அவர் மனதில் எடுக்கும் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பொங்க இறைவன் அருள் செய்வார் என்பதை ரசிகர்கள் தொடர்ந்து சொல்லி வருவதோடு அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version