எல்லாமே வதந்தி.. என்னுடைய உயிர்.. உலகம் எல்லலாமே இவங்க தான்.. விஜே பிரியங்கா உடைத்த ரகசியம்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே .

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக தென்பட்டு வருகிறார்.

தன்னுடைய நெருங்கிய நண்பரான மா கா பா ஆனந்தின் உதவியோடு தான் அவரின் சிபாரிசின் பெயரில் தான் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு பிரியங்காவுக்கு கிடைத்தது.

விஜே பிரியங்கா:

இதனை அவரே பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் தொலைக்காட்சி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

குறிப்பாக சூப்பர் சிங்கர் ஜூனியர் சூப்பர் சிங்கர் ஜூனியர் ,ஸ்டார் மியூசிக் , ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம் இசை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் இவர் சன் தொலைக்காட்சி, சன் மியூசிக் டிவி ,சுட்டி டிவி, ஸ்டார் விஜய் போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் தொகுப்பாளினியாகவே தன்னுடைய துறையிலே நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் விஜய் பிரிங்கா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதே அவரது ரசிகர்கள் பெரும்பாலும் யாரும் விரும்பவில்லை.

காரணம் அந்த நிகழ்ச்சிக்கு போன பிறகு கெட்ட பெயரோடு வெளியே வரப் போகிறார் என பலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

நல்ல பெயரோடு வந்த பிரியங்கா:

ஆனால் அதற்கு மாறாக பிரியங்கா இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒரு நல்ல பெயரோடு தான் வெளியில் வந்தார்.

குழந்தை போன்று சுபாவம், யாரையும் புண்படுத்தாத மனது, கலகலப்பான பேச்சு, காமெடியான காமெடியான பாடி லாங்குவேஜ் உள்ளிட்டவை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த தொகுப்பாளினியாக பிஜே பிரியங்கா நல்லதொரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இவருக்கு அடுத்து யாருமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனக்கான இடத்தை ஆணித்தரமாக பிடித்து உச்சத்தில் அமர்ந்திருக்கிறார்.

குறிப்பாக விஜய் டிவியின் டிஆர்பி பிரியங்காவால் தான் உயரத்திற்கு சென்றிருக்கிறது என்றாலும் கூட அது மிகையாகாது.

டிடிக்கு அடுத்தபடியாக தற்போது தொகுப்பாளினியில் பிரியங்கா தனது இடத்தை நிலை நாட்டி வைத்திருக்கிறார்.

இதனிடையே அவரது தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து பார்த்தோமானால் இவருக்கு பிரவீன் குமார் என்பவருடன் கடந்து 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது .

தவறாய் போன திருமண வாழ்க்கை:

இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் பிரவீன் குமாரும் விஜய் டிவியில் வேலை பார்த்து வந்தவர் தான் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த திருமண வாழ்க்கை பிரியங்காவிற்கு மகிழ்ச்சி தரும்படியாக அமையவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெகு சில வருடங்களில் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் எந்த ஒரு இடத்திலும் பிரியங்கா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ததாக வெளிப்படையாக தெரிவிக்கவே இல்லை.

தான் தொகுத்து வழங்கும் எந்த ஒரு நிகழ்ச்சியும் தனது கணவரைப் பற்றி அவர் பேசுவது பேசியதே கிடையாது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அவரை சந்திக்க வரும்போது அவரது கணவர் வரவே இல்லை. அவரது அம்மாவும் அவரது தம்பியும் தான் வந்திருந்தார்கள்.

இதன் மூலம் அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது இருந்தாலும் அதை ரகசியமாக வைத்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் தனது அம்மாவுடன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் என்னுடைய முதல் திருமணம் தான் உன் தவறாக போய்விட்டது.

அதனால் நீங்கள் மிகவும் வருத்தப்பட்டு துன்பத்திற்கு ஆளானீர்கள் . ஆனால் என்னுடைய இன்னொரு முடிவு உங்களை எப்போதும் காயப்படுத்தாது எனக் கூறியிருந்தார் .

இதன் மூலம் அவருக்கு மறுமணம் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றிய கலந்து கொண்ட பிரியங்கா தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு மிகவும் முக்கியமான நபர் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

என் உயிர், உலகம் எல்லாம் அவர் தான்:

அதாவது என்னுடைய உயிர் உலகம் எல்லாமே இப்போது என்னுடைய தம்பியின் மகளான இஷா தான். அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையை மிகவும் அழகானது.

நான் மகிழ்ச்சியாக இப்போது இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணமே இஷா குட்டி தான். அவள் இல்லை என்றால் நான் இந்நேரம் எப்படி இருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

நான் நிறைய ரீலிஸ் வீடியோக்களை பார்த்திருக்கிறேன்.அத்தை மருமகள் எப்படி இருப்பார்கள் என்று தெரியும். எனக்கும் ஒரு அத்தை இருக்கிறார்.

ஆனால் அவர் மிகவும் வயதானவர் ஊரில் இருப்பதால் எங்களுக்குள் பெரிதாக பாண்ட்டிங் இல்லை. என்னுடைய மருமகளான ஈஷா அவள் குழந்தையிலிருந்து நானும் அவளும் மிகவும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம்.

இந்த விஷயத்தில் என்னுடைய தம்பியின் மனைவி என்னை நன்றாக புரிந்து கொண்டு வைத்திருக்கிறாள் நாங்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே தோழிகள் என்பதால் நான் இஷாவுடன் நெருக்கமாகி இருப்பதை அவளும் விரும்புவாள் என கூறியிருக்கிறார் பிரியங்கா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version