மணிமேகலை விலகும் நாளில் நடந்த திடுக் சம்பவம்!. பிரியங்காவின் வினோத பாலிட்டிக்ஸ்..!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சில நபர்களில் மணிமேகலை முக்கியமானவர் ஆவார். மணிமேகலை தன்னுடைய இளம் வயதில் தொடர்ந்து சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கு அதற்கு பிறகு வேறு வேறு துறைகளிலும் ஆர்வம் வந்தது. அந்த வகையில் காமெடி செய்வதில் மணிமேகலைக்கு நல்ல ஆர்வம் இருந்ததன் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

திடுக் சம்பவம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்ப காலகட்டம் முதலே முக்கியமான கோமாளியாக மணிமேகலை இருந்து வந்தார். அதிலும் குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் அவருக்கு வரவேற்பு அதிகரித்தது. இந்த நிலையில் தற்சமயம் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக இருந்து வந்தார் மணிமேகலை.

 

ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட பகீர் தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆரம்பம் முதலே பெரும் கோமாளியாக இருந்து வந்தாலும் கூட இப்பொழுது நிகழ்ச்சியை விட்டு அவர் விலகி இருக்கிறார்.

மணிமேகலை விலகல்:

அதற்கு என்ன காரணம் என்று அவர் ஒரு காணொளியில் கூறியிருக்கிறார் அதில் மணிமேகலை கூறும்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து பாரபட்சம் பார்க்கப்படுகிறது. முக்கியமாக அதில் குக்காக  வந்திருக்கும் தொகுப்பாளர் ஒருவர் தொடர்ந்து எனது வேலையில் தொல்லை கொடுத்து வருகிறார்.

அதனால் என்னால் தொடர்ந்து பணிபுரிய முடியவில்லை. இதை நான் குக் வித் கோமாளியின் படக்குழுவிடமும் கூறினேன். ஆனால் அவர்கள் அந்த தொகுப்பாளரை பகைத்துக் கொள்ள வேண்டாம் அப்பொழுது தான் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்கள்.

 

அப்படி சுயமரியாதையை இழந்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார் மணிமேகலை. மேலும் அவர் கூறும் பொழுது எல்லா வாய்ப்புகளையும் அந்த தொகுப்பாளருக்கு கொடுக்க சொல்லுங்கள்.

வினோத பாலிட்டிக்ஸ்

அப்பொழுதாவது மற்றவர்களின் இடத்தை அவர் பறிக்காமல் இருப்பார். என்று கூறி இருக்கிறார். மணிமேகலை அப்படி கூறியது வி.ஜே பிரியங்காவைதான் என வெளிப்படையாக தெரிகிறது. இந்த நிலையில் மணிமேகலை திடீரென்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஆனாலும் சமூக வலைதளங்களில் மணிமேகலைக்கு ஆதரவாகதான் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. வி.ஜே பிரியங்காவை விட மணிமேகலை நன்றாகவே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடியவர் என்கின்றனர் அவரின் ரசிகர்கள். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அதிக பேச்சாக மாறியிருக்கிறது வி.ஜே பிரியங்கா மணிமேகலை பிரச்சனை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version