விஜய் டிவியில் பணியாற்றி வரும் விஜே பிரியங்காவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவு நிகழ்ச்சிகளை கெத்தான முறையில் தொகுத்து வழங்கி ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம்.
மேலும் இவர் மாகாபா ஆனந்துடன் சேர்ந்து தொகுத்து வழங்கும் ஷோக்கள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சியும் படு சூப்பராக நேரம் போவதே தெரியாமல் சென்று விடும்.
அந்தளவு ரசிகர்களை தனது நகைச்சுவையாலும் அற்புதமான பேச்சு திறனாலும் கட்டி போடக்கூடியவர் தான் விஜே பிரியங்கா.
இவர் விஜய் டிவியில் நடந்து வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வில் இவர் கலந்து கொண்டதின் மூலம் இவரது புகழுக்கும் பெயருக்கும் சில நெகட்டிவ் கமெண்ட்கள் வந்து சேர்ந்தது.
இதை அடுத்து ஏன்டா நாம் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டோம் என்று எண்ணி வருவதால் இன்றுவரை இவர் மனதில் ஆறாத வடுவாக அது உள்ளது.
பிறகு இவர் தொகுப்பாளராக விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் மலேசியா தற்போது சென்றிருக்கிறார். அங்கு இவருக்கு ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பை பார்த்து இவ்வளவு அன்பை இவர் எதிர்பார்க்கவே இல்லை என்று ஒரு வீடியோவில் கண்கலங்க பதில் அளித்திருக்கிறார்.
மேலும் இந்த வீடியோவில் பிக் பாஸ் சென்றது தவறு என்று யோசித்து கொண்டு இருக்கக்கூடிய இந்த நேரத்தில் இப்படி மலேசியாவில் ரசிகர்கள் இவருக்கு அன்பு காட்டி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற ரசிகர்களின் ஆதரவு எப்போதும் தனக்கு கிடைக்கும் என்பது இதன் மூலம் திட்டவட்டமாக தெரிந்து விட்டது. யார் எது போன்ற கருத்துக்களை என்மீது தவறாக கூறி வந்தாலும் அதற்கு அப்பால் கடவுள் அற்புதத்தை நிகழ்த்தி விடுகிறார் என்று கூறியதோடு ஆனந்த கண்ணீரை விட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவர்களின் ஆதரவு எப்போதும் இவருக்கு உண்டு என்ற தொனியில் பேசி இருக்கிறார்கள்.