இந்த ரெண்டு விஷயம் எனக்கு வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து விஜே பிரியங்கா..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் விஜய் பிரியங்கா கலகலப்பான பேச்சாளும் காமெடியாலும் யாரையும் புண்படுத்தாத இப்படியோ மிகவும் சந்தோஷமாக தான் நாம் அவரை பார்த்திருப்போம்.

ஆனால், அவரின் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவங்களை பற்றி கண்கலங்கி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பிரியங்கா .

தொகுப்பாளினி பிரியங்கா:

பிரியங்கா இவ்வளவு சோகங்களை மனதில் தேக்கி வைத்திருக்கிறாரா? இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா? அதையெல்லாம் மறைத்துக்கொண்டு தான் அவர் மக்களை இவ்வளவு மகிழ்ச்சி படுத்துகிறாரா என வியக்க வைக்கும் அளவுக்கு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதைப்பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.பிரபல தொகுப்பாளினியாக விஜய் டிவியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காமெடி கலந்த பேச்சும், காமெடியான ரியாக்சன்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளாமே இருக்கிறார்கள். இதனிடையே விஜே பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதில் சில விமர்சனத்திற்கு உள்ளானாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதிலும் தனக்கான ஒரு தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.

அதை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் தொலைக்காட்சிகளை தொகுத்து வழக்குவதில் பிஸியாக இருந்து வருகிறார்.

எனக்கு அந்த ஆசை இருக்கு:

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொகுப்பாளியான விஜே அர்ச்சனா எடுத்த நேர்காணல் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரியங்கா தன் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவங்களை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

40 வயசுக்குள் என்னெல்லாம் செய்யணும்னு உங்களுக்கு ஆசை? என கேள்வி கேட்டதற்கு, ஒரு பெரிய கார் வாங்கணும் அது என்னோட நீண்ட நாள் ஆசை அதை நான் பண்ணிட்டேன்.

அடுத்தது பிக் பாஸ் போகணும் அப்படிங்கறது என்னோட மிகப்பெரிய கனவு லிஸ்டில் இருந்தது அதையும் நான் இப்ப பண்ணிட்டேன்.

அடுத்ததாக சொந்தமா ஒரு வீடு வாங்கணும் என்ற ஒரு கனவு இருக்கு. இப்போது இருக்கிற வீட்டில் சில ஞாபகங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக அதை மூடிவைத்துவிட்டேன்.

என்னுடைய கனவு வீட்டை பார்த்து பார்த்து கட்டணும் அப்படிங்கற இன்னொரு மிகப்பெரிய ஆசையும் இருக்கு. அத்துடன் 25 வெளிநாடுகளுக்கு போகணும்.

இதுவரைக்கும் நான் அமெரிக்காவே போகல. கிட்டத்தட்ட 40 வயசுக்குள்ள அந்த ஒரு ஆசையை நிறைவேற்றிடனும்.

நிறைய பேர் எனக்கு கல்யாணம் மூன்று கல்யாணம் ஆகிடுச்சு என்று வதந்தி கிளப்பி விடுறாங்க. ஆனால் என்னை காதலிப்பவர்களை நான் அதிகமாக காதலிக்கிறேன்.

இரண்டாம் திருமணம்…. குழந்தை பெத்துக்கணும்:

ஒரு அழகான குழந்தை பெத்துக்கணும் அப்படிங்கற ஒரு ஆசை இருக்கு. அதுக்கு நான் ரொம்ப ஹெல்த்தியா இருக்கணும்.

என்னோட அண்ணன் மகள் தான் இப்போ எனக்கு எல்லாமே. அவளுடைய காதலுக்காக தான் நான் ஏங்குகிறேன்.

அவளுக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன். சின்ன வயசுல நான் இருந்த மாதிரியே தான் இப்போ அவள் இருக்கிறாள்.

அவள் என் அண்ணன் மகள் இல்லை… என் மகள் என், அம்மா என், என் வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சு. என்னுடைய அம்மா கிட்டத்தட்ட அவங்களோட 34 நாலு வயசுல இருந்து எங்களுக்காக கஷ்டப்படுறாங்க.

குடும்பத்துல பல சுமைகளை தனியாவே தாங்கி நின்னாங்க. என்னுடைய அண்ணன் மகள் வந்து தான் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் கொடுத்தார் என எமோஷனலாக பேசினார்.

அது மட்டும் இல்லாமல் எனக்கு அன்பு கொடுத்து என்னை உள்ளங்கையில் தாங்குகிறவர்களுக்கு அதைவிட பல மடங்கு ஜாஸ்தியாக நான் அன்பை திருப்பிக் கொடுப்பேன்.

எனக்கு காதலிக்கணும் என்ற ஆசை இருக்கு. என்னை ஏமாற்றாத ஒரு விஷயம் என்றால் அது என் தொழில்தான்.

என்னை நம்பி இருக்கும் மக்களுக்காக நான் எல்லாத்தையும் விட்டு அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என கண்கலங்கி பேசினார். இந்த பேட்டி அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version