18 வயசுலேயே அப்படி கேட்டாங்க.. விவாகரத்திற்கு காரணம் இது தான்.. VJ ரம்யா உருக்கம்..!

ரம்யா சுப்பிரமணியத்தை தான் அனைவரும் VJ ரம்யா என்று அன்போடு அழைக்கிறார்கள். இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்ற கூடிய ஒரு அற்புதமான திறமைசாலி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பத்மா சேஷாத்திரி பாலபவனில் பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்தார்.

இதனை அடுத்து கல்லூரி படிப்பை முடித்த இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

விஜே ரம்யா..

2004 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் ரம்யா சுப்பிரமணியம் பங்கேற்றார். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் 2007 ஆம் ஆண்டில் வெளி வந்த மொழி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து மணிரத்தினத்தின் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு துல்கர் சல்மானின் தோழியாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு கிடைக்காத காரணத்தால் 2017 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயராமனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை.

விவாகரத்துக்கு காரணம்..

இதனை அடுத்து இவர் ஏன் விவாகரத்து பெற்றார் என்பதை குறித்தும் தனது மண வாழ்க்கை பற்றியும் விரிவாக பேசி அனைவரையும் ஷாக்கிங்கில் தள்ளவிட்டார்.

இவர் தனது மண வாழ்க்கையைப் பற்றி பேசும் போது திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மிகவும் முக்கியமானது புனிதமானது என்பதில் தனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

எனினும் நான் நடிகையாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் என் திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு என் மீது அனுதாபம் தான் வந்திருக்கும். ஆனால் ஒரு நடிகை என்பதால் என் மீதான பார்வை மற்றவர்களுக்கு மாறி விட்டது.

பொதுவாகவே பெண்கள் திருமண வாழ்க்கையில் இருந்து வெளி வர விரும்ப மாட்டார்கள். அப்படிபட்ட பெண்கள் அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வருகிறார்கள் என்றால் அதற்கு வலுவான காரணம் இருக்கும்.

அது மட்டுமல்லாமல் ஒரு பெண் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். எப்போது அவள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவளுடைய விருப்பம் தான் இதில் மற்றவர்கள் தலையிடுவது அநாகரீகம்.

அந்த வகையில் நான் 18 வயதில் படிப்பு, நடிப்பு என்று பிஸியாக இருந்தேன். இரவில் சரியாக தூங்காததால் என் கண் சிவப்பாக இருந்தது. அப்போது ஒரு கேமரா மேன் என்னிடம் வந்து நைட் ஃபுல்லா சரக்கான்னு கேட்டாரு.. இதைக் கேட்டதுமே எனக்கு ஒரு மாதிரியாக இருந்ததால் அழுதேன் என்று கூறி இருக்கிறார்.

எனவே பெண்களின் உண்மை நிலை என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இது போல பேசும் ஆண்களால் அவர்கள் மனநிலை மட்டுமல்லாமல் உடல் அளவிலும் சோர்ந்து விடுகிறார்கள் என்பது எப்போது தான் புரியும்.

எனவே இனி மேலாவது இது போன்ற அனாவசிய கேள்விகளை பெண்களிடையே எழுப்பாமல் இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

மேலும் விஜே ரம்யாவின் விவாகரத்துக்கு காரணம் இதுதான் என்பதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை சொல்லக்கூடிய வகையில் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version