“இது உடம்பா..? இல்ல ரப்பாரா..?..” ஜிம் உடையில் தலைகீழாக தொங்கும் VJ ரம்யா..!

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து ஹீரோயின் ரேஞ்சிற்கு மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் பிஜே ரம்யா.

இவர் 2004 ஆம் ஆண்டில் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று இருந்தார். அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார்? உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜே ரம்யா:

மேலும், நம்ம வீட்டு கல்யாணம் , கேடி பாஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தார்.

இதனிடையே திரைப்படங்களில் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

2007 ஆம் ஆண்டில் ரம்யா மொழி திரைப்படத்தின் மூலமாக திரைப்பட நடிகையாக அறிமுகமானார். அதை அடுத்து மணிரத்தினத்தின் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக நடித்திருந்தார்.

திரைப்படங்களில் ரம்யா:

தொடர்ந்து மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை , மாஸ்டர், சங்க தலைவன் இப்படி ஒரு சில திரைப்படங்களில் குணசேத்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார் விஜே ரம்யா.

இருந்தாலும் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பதையே அதிகம் விரும்புவதால் தொடர்ந்து திரைப்பட விழாக்கள் மற்றும் பிரபலங்கள் உடனான நேர்காணல் விருது விழாக்கள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளியாக இருந்து வருகிறார்.

இதனிடையே கடந்து 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

திருமணம்… விவாகரத்து:

ஆம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார் பிஜே ரம்யா.

நிகழ்ச்சி தொகுப்பாளியாகவும், நடிகையாகவும் இருந்து வரும் விஜே ரம்யா தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

குறிப்பாக தனது உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடனும் அக்கறையுடனும் இருப்பார். யோகா உடற்பயிற்சி, டயட் உள்ளிட்டவற்றை தவறாமல் பாலோ செய்வார் ரம்யா.

அத்துடன் அதை தன்னுடைய ரசிகர்களுக்கு டிப்ஸ் ஆகவும் வழங்குவார். அவ்வப்போது ஜிம் வொர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

தலைகீழாக தொங்கும் VJ ரம்யா:

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜிம் உடையில் தலைகீழாக தொங்குவது போன்ற பிஜே ரம்யாவின் இந்த புகைப்படத்தை பார்த்த எல்லோரும் இது என்ன உடம்பா? இல்ல ரப்பரா? என வியந்து போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்போது 37 வயதாகும் விஜே ரம்யா தொடர்ச்சியாக தனது தனது உடலை கட்டுக்கோப்பாகவும் கவர்ச்சி அழகாகவும் வைத்திருக்க தொடர்ந்து மைண்டென் செய்து வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version