VJ ரம்யா : திருமணம் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் தொடக்கமோ..? அல்லது முடிவோ அல்ல என்று தன்னுடைய விவாகரத்து குறித்தான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் வீஜே ரம்யா.
சின்னத்திரை வட்டத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜே ரம்யா. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
மட்டுமில்லாமல் சினிமா சார்ந்த அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உண்டான வழிமுறைகள் என்ன என்பதை ஒரு புத்தகமாக எழுதுவது என தன்னை பிசியாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் VJ ரம்யா.
இந்நிலையில் விஜே ரம்யா திருமணம் மற்றும் வாடகைத்தாய் முறை போன்றவற்றைப் பற்றி சில விஷயங்களை பேசி இருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இவர் சில வருடங்கள் கூட நீடிக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.
திருமணம் நடந்த அடுத்த வருடமே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிறந்த வீட்டிற்கு திரும்பினார் VJ ரம்யா. அதிலிருந்து தற்போது வரை சிங்கிளாகவே வாழ்ந்து வரும் இவர் விவாகரத்து குறித்து இதுநாள் வரை வாய் திறக்காமல் இருந்தால் அதனால் தற்பொழுது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய விவாகரத்து குடித்தான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறியதாவது திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையின் தொடக்கமோ அல்லது ஒரு வார்த்தை ஒருவரின் வாழ்க்கையின் முடிவோ கிடையாது மற்றவருடைய கட்டாயத்திற்காகவோ ஆசைக்காகவோ நாம் எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடாது என்று அவர் தன் திருமண வாழ்க்கை குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
மட்டுமில்லாமல் நம்முடைய திருமணத்திற்கு பிறகு குழந்தை என்று வரும்பொழுது அது நம்முடைய விருப்பப்படி தான் அமைய வேண்டும் அதே சமயம் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவரவருடைய சூழ்நிலை அவரவருடைய விருப்பம் என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் இவர் எப்படியான பிரச்சினைகளை சந்தித்து திருமணம் இருந்து விவாகரத்து பெற்று இருக்கிறார் என்பது நமக்கு தெரிய வருகிறது. இருப்பினும் அது அனைத்தையும் கடந்து வந்திருக்கும் VJ ரம்யா தற்போது பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் யூடியூப் சேனல் மற்றும் புத்தகம் என என அனைத்து வகையிலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உண்டான தகவல்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.