2ம் திருமணத்துக்கு தயாராகும் VJ ரம்யா.. ஆனால்.. இப்படி ஒரு பிரச்சனையா..?

ஊருக்கு உபதேசம் செய்வது என்றால் எல்லாருக்குமே அல்வா சாப்பிடுவது போல் சந்தோஷமாக தான் இருக்கிறது. ஏனென்றால் மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்வது என்பது ஒரு விதமான சந்தோசத்தை, மனதிருப்தியை, ஒருவித மகிழ்ச்சியை கூட மனதுக்குள் தரலாம்.

ஆனால் அப்படி அட்வைஸ் தருபவர்கள் அவர்களது சொந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, அப்படிப்பட்ட அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

திருமண வாழ்க்கை

குறிப்பாக சினிமா நடிகைகளை பொறுத்தவரை, அவர்களது திருமண வாழ்க்கை என்பது பெரும்பாலும் சரியாக அமைவதில்லை. இதற்கு முக்கியமான காரணம், குடும்ப வாழ்க்கையை பொருத்தவரை பொருளாதாரமென்பது கணவரை சார்ந்திருக்கும் பட்சத்தில் பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகின்றனர்.

கணவரின் அன்புக்கு கட்டுப்படுவது, கணவருடன் அன்னியோனியமாக இருப்பது, குடும்பம், பிள்ளைகள் போன்ற விஷயங்களில் ஆழமான ஈடுபாடும் அக்கறையும் காட்டுகின்றனர். அதுவே மனைவியும் கணவரைப் போலவே பணம் சம்பாதிக்கும் பெண்களாக இருக்கும் பட்சத்தில், அது அந்த பணத்துக்காக கணவரை நாட வேண்டிய அவசியமில்லை.

இந்த ஒரு சூழ்நிலையில் தங்களது வாழ்க்கையை தங்களை தீர்மானித்துக் கொள்ளும் இடத்தில் இருக்கும்போது கணவரை லைப் பார்ட்னர் ஆக கூட மதிக்காமல், அவர்கள் விரைவில் பிரிவதில் கொஞ்சமும் சங்கடம் கொள்வதில்லை.இதனால் பல நடிகைகள், கணவருடன் சேர்ந்து வாழ்வதில்லை.

இரண்டாம் திருமணம், மூன்றாம் திருமணம் செய்தாலும் அவர்களை திருமண வாழ்க்கை நிலைப்பதில்லை. தவிர, சிலர் ஒரு திருமணம் செய்துவிட்டு அடுத்த திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே தங்களது வாழ்க்கையை கடத்தி விடவும் முடிவு செய்து விடுகின்றனர்.

VJ ரம்யா

அந்த வகையில் VJ ரம்யா சுப்ரமணியன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

அவர் முக்கிய முன்னணி சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்.

இப்போது சின்ன சின்ன ரோல்களில் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் உடல்எடையை குறைப்பது குறித்து பிட்னஸ் குறித்து பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

திருமணமாகி விவாகரத்தானவர்

முதலில் சற்று உடல் பருமனான நிலையில், இருந்த VJ ரம்யா இப்போது உடல் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VJ ரம்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கிளாக இருப்பது குறித்தும் ரிலேஷன்சிப் பற்றியும் சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

ரிலேஷன்சிப்புக்குள் நுழைவது கடினம்

அதில் சிங்கிளாக இருந்து ரிலேசன்ஷிப்புக்குள் நுழைவது மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறும் வகையில், ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

2ம் திருமணத்துக்கு தயாராகும் முடிவை எடுத்துள்ள VJ ரம்யா, இப்படி உறவுக்குள் நுழைவது குறித்து பிரச்சனையாக பார்ப்பதுதான் அவருக்கு இப்போது பெரிய பிரச்னையாக உருவாகி இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam