தியா மேனன் என்பவர் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர். மேலும் இவர் வீடியோ தொகுப்பாளராகவும் பணியாற்றி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவர் தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தன்னுடைய திறமையின் மூலம் பல நெஞ்சங்களை சம்பாதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு எடுத்துக்காட்டாக அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அவற்றுள் கிரேசி கண்மணி, இந்தப் படம் எப்படி இருக்கு, சுடச் சுட சென்னை ஆகிய நிகழ்ச்சிகள் அடங்கும்.
தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ஒருவர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை தனது கணவரே எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.சன் டிவியில் ஒளிபரப்பான ’சூப்பர் சேலஞ்ச்’ ’சவாலே சமாளி’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தியா மேனன்.
இவர் விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ விஜய் நடித்த ’வில்லு’ உள்பட ஒருசில படங்களில் பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி, தொகுப்பாளினி, நடன கலைஞர் என பன்முக திறமை உள்ள இவர் சிங்கப்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் அவர் கணவருடன் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் முதன்முதலில் சன் மியூசிக்கில் ஒளிபரப்பாகிய கிரேசி கண்மணி மற்றும் கால் மேல காசு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகம் ஆனார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகிய சவாலே சமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் ஆதவனோடு சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இருப்பார் அது மக்களின் மனத்தில் இவர் நீங்காத இடம் பிடிக்க அதுவும் ஒரு காரணமாய் அமைந்தது. இருப்பினும் அவ்வப்போது தியாமேனன் தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார் என்பதும் சமூகவலைதளத்தில் குறிப்பாக யூடியூபில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காதலர் தினத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை எடுத்தது தனது கணவர் கார்த்திக் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் வாழ்த்துக்கள் கூறி கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது