யார் யார் எவ்வளவு ஓட்டு தெரியுமா?- ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்  உறுப்பினராக இருந்த ஈவேரா அவர்களின் மரணத்தை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

திமுக நேரடியாக நிற்காமல் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈவேரா அவர்களின் தந்தையான காங்கிரஸ் உறுப்பினர் இ வி கே இளங்கோவன் அவர்களை நிறுத்தியது.

அதிமுகவின் எடப்பாடி அணி நேரடியான தனது வேட்பாளர் நிறுத்தியது.

அதுபோக  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது வேட்பாளரை நிறுத்தினார்.

அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு ஒரு வழியாக தேர்தலும் நடந்து முடிந்தது.

நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில்,

 காங்கிரஸ் – 1,10,156

அதிமுக – 43,923

 நாம் தமிழர் – 10,827

தேமுதிக – 1432

இதில் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியை பெற்றுள்ளது, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெல்வது தமிழ்நாட்டில் சாதாரணமான விஷயம் என்றாலும்,  இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வெல்வது இதுவே முதல்முறை.

இது அதிமுக எடப்பாடி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சிக்காரர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் பரிசுப் பொருட்கள் எதுவும் கொடுக்காமல் வாங்கிய பத்தாயிரத்து எண்ணூற்று இருபத்தி ஏழு வாக்குகளும் தங்களுக்கு மிகப்பெரிய தானே சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தேமுதிக வங்கி ஓட்டுக்களால் நாங்கள் சோர்ந்து போக போவதில்லை என அந்த கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுபோல சுவாரசியமான பல அரசியல் தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …