மனம் கொத்தி பறவை ஆத்மியா-வா இது..? – இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

மனம் கொத்தி பறவை படத்தில், தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மியா.(Athmiya) நடித்தது ஒரு படம் என்றாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக ஆத்மியா மாறினார்.

ரேவதி என்ற கேரக்டரில் நடித்த இவரை, கண்ணன் என்ற கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன் ஒரு தலையாக காதலிப்பார். இது தெரியாமல், இருவரும் காதலர்கள் என நினைக்கும் சிவகார்த்திகேயனின் நண்பர்கள், ஆத்மியா திருமண நாளுக்கு முந்தைய இரவில், மயக்கமடையச் செய்து கடத்தி விடுவர். கடைசியில், ஆத்மியா சிவகார்த்திகேயனை காதலிக்கவில்லை என்பதும் நண்பர்களுக்கு புரிந்து அதிர்ச்சியடைவர்.

Athmiya

ஒரு கட்டத்தில், சிவகார்த்திகேயன் அன்பை புரிந்துகொள்ளும் ஆத்மியா, அவரது காதலை ஏற்றுக்கொள்ள இறுதியில் அவரது குடும்பமும் அவர்களை ஏற்றுக்கொள்வதும்தான், மனம் கொத்திப் பறவை.

சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில், துவக்க காலத்தில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த படங்களில் இதுவும் ஒன்று. இதில் சிங்கம்புலி, சாம்ஸ், சூரி, இளவரசு, ரவி மரியா, ஆடுகளம் நரேன் போன்றவர்களின் நடிப்பும், படத்தை இன்னும் சுவாரசியப்படுத்தியது.  

Athmiya

கேரளா, கண்ணூரைச் சேர்ந்த ஆத்மியாவின் முழுப்பெயர் ஆத்மியா  ராஜன்.மலையாளம், தமிழ் மொழி படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருக்கிறார்.கடந்த 2021ம் ஆண்டில், சனுப் கே நம்பியார் என்பவரை, திருமணம் செய்துகொண்டார்.ஆத்மியா, மங்களூரு நர்சிங் படிப்பு படித்தவர். ஆனால், மருத்துவத் துறைக்கு போகாமல், சினிமாவுக்குள் வந்துவிட்டார்.  

கடந்த 2009ம் ஆண்டில், ‘ வெள்ளத்தூவல்’என்ற மலையாள படம் ஒன்றில் ஆத்மியா அறிமுகமானார் அடுத்து, தமிழில் மனம் கொத்திப்பறவை – படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்தார்.

அதன்பின், சில மலையாள படங்களில் நடித்தார்.  போங்கடி நீங்களும் உங்க காதலும், அமீபா,  ஜோசப், மார்கோனி மாத்தாய், வெள்ளை யானை உள்ளிட்ட படங்களில் ஆத்மியா நடித்தார். இதில், ஜோசப் படத்தில் சிறந்த நடித்தற்காக, கேரள சினிமா விமர்சகர்கள் சங்கம் சார்பில் சிறப்பு ஜூரி விருது,  2019ம் ஆண்டில் பெற்றிருக்கிறார் ஆத்மியா.

Athmiya

ஆத்மியா, தமிழ் சினிமாவில் அதிகமாக நடிக்காவிட்டாலும், மனம் கொத்திப் பறவை படமே அம்மணியின் அழகு, ரசிகர்களின் மனதில் நிலைத்துவிட்டது. மேலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆத்மியா, அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து விடுகிறார்.

கேரளத்து பைங்கிளியான அவரது அழகை பார்த்து, சொக்கிப்போகும் ரசிகர்கள், அடடா, ஆத்மியா மீண்டும் தமிழ் சினிமா உலகில் ஒரு ரவுண்ட் வரவேண்டுமே என, எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Athmiya

இப்போது, அப்டேட் செய்துள்ள சிவப்பு நிற உடையில் அவரது வசீகர அழகை பார்த்து, ரசிகர்கள் லைக் மழையை பொழிந்து வருகின்றனர். ஆத்மியா, முக வடிவில் வசீகரத்தில் ரசிகர்களை மயக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் இப்போது செம வைரலாகி வருகின்றன,

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.  

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …