ஒரு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீரை மட்டும் குடித்து வருவது தான் தண்ணீர் விரதம் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை வாட்டர் பாஸ்டிங் என்று சொல்வார்கள்.
பொதுவாக வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ சாப்பிடாமல் விரதம் இருக்கிறார்கள். அதுபோலத்தான் மாதத்தில் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை எந்த தண்ணீர் விரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த விரதத்தை அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் தண்ணீர் விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.
ஆனால் நீரழிவு நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த விரதத்தை மேற்கொள்வது அவரது ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே அவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளக் கூடாது.
தண்ணீர் விரதத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள்:
👍. தண்ணீர் விரதம் ஆனது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
👍. இது உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை தோற்றுவிக்க கூடிய தன்மை இந்த விரதத்திற்கு உண்டு
👍. அதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க துரிதமாக செயல்பாடுகளை தூண்ட வைக்கக்கூடிய ஆற்றல் இந்த விரதத்தினால் ஏற்படும்.
👍. உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இது உதவி செய்கிறது. உடலில் அதிக அளவு கொழுப்புச்சத்து இருக்கும் பட்சத்தில் அந்த கொழுப்புச்சத்தை குறைக்க கூடிய சக்தி தண்ணீர் விரதத்திற்கு உள்ளது.
👍. அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரித்து தரும்.
தண்ணீர் விரதம் இருக்கும் முறை :
தண்ணீர் விரதம் இருப்பவர்கள் பொதுவாக 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
இந்த விரதத்தை இருந்து பயிற்சி பெற்றவர்கள் மூன்று நாட்கள் ஏழு நாட்கள் 14 நாட்கள் மற்றும் 21 நாட்கள் வரை தண்ணீரை மட்டுமே குடித்து இந்த விரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
எனவே இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் திட உணவுகளை அறவே தவிர்த்து விட வேண்டும் தண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும் பழரசங்கள் அருந்தக்கூடாது.