“உடல் சூடு குறைக்க வேண்டுமா..!” – அப்ப உடனே இத செய்யுங்க..!!

உடல் சூடு காரணமாக எண்ணற்ற விளைவுகளை என்று நாம் சந்தித்து வருகிறோம். உடல் சூடு பிடித்து விட்டால் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அதை சரி செய்யக்கூடிய வழியும் தெரியாமல் தவிக்க கூடிய நபராக நீங்கள் இருந்தால் கீழ்க்காணும் குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் உடல் வெப்பமடைவதை தவிர்த்து உங்கள் உடலை குளிமையாக முயற்சி செய்யுங்கள்.

உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சியை பெற கூடிய வழிகள்

👍என்ன செய்தாலும் உடல் உஷ்ணம் குறையவில்லை என்று புலம்பக் கூடியவர்கள். வாரத்தில் இரண்டு முறை வெண்பூசணியை சாறு எடுத்து குடித்து வர உடல் சூடு குறைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலை இன்மையில் இருந்தால் அதை சரி செய்யக்கூடிய ஆற்றல் இந்த வெண்பூசணிக்கு உண்டு. பெண்களுக்கு உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த வெண் பூசணி சாறு உள்ளது.

👍உங்கள் வீட்டிற்கு வெட்டிவேரை வாங்கி வந்து அந்த வெட்டிவேரை குடிநீர் பானையில் சுத்தம் செய்து போட்டு விடுங்கள். நீங்கள் அந்த குடிநீரை தினமும் குடிப்பதன் மூலம் உங்கள் உடல் சூட்டை மிக எளிதாக குறைத்து விட முடியும்.

👍மேலும் உடல் சூட்டை குறைக்க மணத்தக்காளி கீரையை நீங்கள் பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதின் மூலம் உடல் சூடு மிக எளிதில் குறையும். அது மட்டுமல்லாமல் குடலில் இருக்கும் புண்களை ஆற்றி அல்சர் நோயை குறைக்க கூடிய அற்புதமான சக்தி இந்த மணத்தக்காளி கீரைக்கு உண்டு.

👍ரோஜா பூவினால் செய்த குல்கந்துவை  சாப்பிடுவதின் மூலம் உடல் உஷ்ணம் பெருமளவு குறையும். காலை உணவுடன் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வர இது என்ன மாயம் என்று கேட்கக்கூடிய அளவு உங்கள் உடல் சூட்டை இது தணித்து விடும்.

👍உடல் சூட்டை தணிக்க தினமும் சீரகத் தண்ணீரை குடிக்கலாம். இந்த சீரகத் தண்ணீரை நீங்கள் குடிக்கும் போது உடல் சூடு குறைந்து செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

👍சின்ன வெங்காயத்தை தினமும் நின்று சாப்பிடுவதின் மூலம் உடல் சூடு குறைவதோடு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி இதய பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய சின்ன வெங்காயம் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

👍நெல்லிக்காய், பழைய சாதம், மோர், இளநீர், வாழைப்பூ ,கீழாநெல்லி சாறு போன்றவை அனைத்தும் உடல் சோர்வை குறைக்க கூடிய அற்புத ஆற்றல் படைத்தவை ஆகும். இவையும் உங்கள் உடல் சூட்டை தணிக்கும்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …