“எகிரி அடிக்கும் சிலிண்டர் விலை..!” – சிக்கனமாய் பயன்படுத்த சில வழிகள்..!

 அன்றாடம் இல்லத்தரசிகளின் பயன்பாட்டில் இருக்கக்கூடிய சிலிண்டர் விலையானது தற்போது இமயத்தை விட உயர்ந்து விட்டது என்று கூறலாம். இதனை அடுத்து எப்படி நாம் இந்த கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் அதை நாம் பயன்படுத்த முடியுமா என்பதில் தீவிரமாக இல்லத்தரசிகள் இருக்கிறார்கள்.

 கிராமத்தில் இருப்பவர்களும் விறகு அடுப்பை தவிர்த்துவிட்டு கேஸ் அடுப்பை தற்போது புழங்கி வருவதால் இன்று கேஸ் இன் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதா என்று கேட்கக் கூடிய நிலைமை உருவாக்கி விட்டது.

 எனவே கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிகளை நீங்கள் ஃபாலோ செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் கேசை சிக்கனமாக பயன்படுத்தலாம்.

சிக்கனமாக கேஸ்சை  பயன்படுத்த சில வழிகள்

 உங்க கேஸ் அடுப்பு இருக்கக்கூடிய பர்னரை அழுக்கு படாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அழுக்கு படியக்கூடிய பட்சத்தில் கேஸ் உங்களுக்கு  அதிக அளவு செலவாகும் என்பதால் அடிக்கடி பர்னரை சுத்தம் செய்ய வேண்டும்.

 நீங்கள் சமையலை ஈடுபடும் போது கேஸ் அடுப்பில் ஈரமான பாத்திரங்களை வைப்பதின் மூலம் சூடாவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும். இதன்மூலம் கேஸ் விரயமாகும் என்பதை உணர்ந்து ஈர பாத்திரங்களில் அடியை உடைத்து விட்டு வைப்பது மிகவும் சிறப்பானது. மேலும் கேஸ் சிக்கனத்தை இது தரும்.

 நீங்கள் எதையும் சமைக்கும் போது மூடி வைத்து சமைப்பதால் எளிதில் வேகம். அதுமட்டுமல்லாமல் கேசும் சிக்கனமாக பயன்படுத்த முடியும். முடிந்தவரை குக்கர்களை பயன்படுத்துவது நல்லது.

 சமைப்பதற்கு முன்பு பிரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தால் அதை ஒரு மணி நேரமாவது வெளியே வைத்துவிட்டு குளிர்ச்சி தீர்ந்த பிறகு சமையலில்  பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாமல் குளிர்ச்சியாகவே பயன்படுத்தினால் வேகவும் செய்யாது அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் கேஸ் அதிகமாகும்.

 அரிசி, பருப்பு, பயிறு போன்ற போன்றவற்றை சமைப்பதற்கு முன்பு சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு சமைப்பதால் எளிதில் வெந்துவிடும். இதன் மூலம் சிலிண்டர் மிச்சம் ஆகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …