“இப்படி செய்தால் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உங்கள் குலதெய்வம் ஓடோடி வரும்..!” – குலதெய்வத்தை வீட்டுக்கு வரவழைக்க இப்படி செய்யுங்க..!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலம் என்று ஒன்று வரையறுக்கப்பட்டு இருக்கும். அப்படி வரையறுக்கப்பட்டு இருக்கக்கூடிய குலம் மற்றும் கோத்திரத்துக்கு என்று குலதெய்வங்கள் இருக்கிறது.

அந்தக் குலதெய்வங்கள் தான் அந்த குடும்பத்தை காத்து நிற்கும் சக்தியை அபரிமிதமாக தந்து குடும்பத்தையே காக்கிறது என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் அங்காளி பங்காளி என அனைவரும் ஒன்று கூடி குலதெய்வத்திற்கு உரிய வழிபாடுகளை செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட குலதெய்வம் உங்கள் வீட்டுக்குள் வாசம் செய்ய வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய குறிப்புகளை ஃபாலோ செய்தால் போதும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உடனே உங்கள் குலதெய்வம் ஓடி வந்து உங்கள் குடும்பத்தை காப்பதோடு எண்ணற்ற வளங்களையும் அள்ளிக் கொடுக்கும்.

குலதெய்வம் வீட்டில் வாசம் செய்ய, செய்ய வேண்டியது

👍ஒவ்வொரு நாளும் உங்கள் குலதெய்வம் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்றால் குறிப்பாக நிலைப்படி மற்றும் பூஜை அறையில் வைத்திருக்கும் கண்ணாடியில் உங்கள் வீட்டு குலதெய்வம் இருப்பதாக ஐதீகம் உள்ளது.

👍எனவே வீட்டின் முன் நிலை வாசப்படியில் நீங்கள் மஞ்சள் மற்றும் சந்தனத்தை வைத்து உங்கள் குலதெய்வம் மன மகிழ்ந்து உள்ளே வர ஏதுவாக வழி செய்ய வேண்டும்.

👍அது மட்டுமல்லாமல் நிலை கதவின் இரண்டு பக்கங்களிலும் எலுமிச்சம் பழத்தில் நெய் தீபம் போட வேண்டும்.இவ்வாறு செய்வதின் மூலம் கட்டாயம் உங்கள் வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யும்.

👍 இதனை ஒவ்வொரு நாளும் செய்ய முடியாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மறவாமல் இதை செய்தால் எத்தகைய சூழ்நிலைகளிலும் நீங்கள் கஷ்டமாக இருக்கும் நேரத்திலும் உங்களை கைவிடாமல் காப்பதற்கு என்று குலதெய்வம் கட்டாயம் வந்து நிற்கும்.

👍எனவே நீங்கள் அலட்சியம் செய்யாமல் இதை செய்வது நல்லது. மற்ற தெய்வங்கள் வந்து உறுதுணையாக இருக்கக்கூடிய நேரத்தை விட உங்களுக்கு அபரிமிதமான பக்க பலமாக இருப்பது உங்கள் குலதெய்வம் தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

👍எனவே குலதெய்வ வழிபாட்டை நீங்கள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் குலதெய்வ கோயில்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்து வருவது மிகவும் நல்லது.

👍அட எனக்கு குலதெய்வம் எது என்று தெரியாது என்று கூறுபவர்கள் திருச்செந்தூரில் இருக்கும் முருகப்பெருமானை தவறாமல் வழிபடலாம்.

👍அதுபோலவே காமாட்சி அம்மனை நீங்கள் குலதெய்வமாக ஏற்று அந்த அம்மன் சந்நிதிகளுக்கு சென்று வழிபடுவதன் மூலம் உங்கள் குலதெய்வ வழிபாடு போட்டியாகும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …