” வீட்டிலேயே ஈசியா பாத்திரம் கழுவும் லிக்விட்..!” – நீங்களே செய்து அசத்தலாமே…!!

 வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் பாத்திரம் தேய்ப்பது என்பது ஒரு சவாலான காரியமாக தான் இருக்கும். எனினும் அந்த காரியத்தை தங்கு தடை இல்லாமல் ஒவ்வொரு நாளும் செய்து வரக்கூடிய இவர்கள் அந்த பாத்திரத்தை பளபளப்பாக மாற்ற பல்வேறு விதமான லிக்குவீட்டுகளை மார்க்கெட்டுகளில் இருந்து பெற்று வந்து தான் பயன்படுத்துகிறார்கள்.

இதில் சில லிக்விட்கள் அவர்களுக்கு ஒவ்வாமையை  ஏற்படுத்தி விடுவதால் எண்ணற்ற எண்ணல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே ஒவ்வாமையை ஏற்படுத்தாத பாத்திரம் தேய்க்கும் லிக்விட்டை உங்கள் வீட்டில் நீங்கள் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாத்திரம் தேய்க்கும் லிக்விட் செய்ய தேவையான பொருட்கள்

1.எலுமிச்சை பழம் மூன்று

2.உப்பு இரண்டு டீஸ்பூன்

3.பேக்கிங் சோடா 2 டீஸ்பூன்

4.வினிகர் 75 மில்லி

5.டிட்டர்ஜென்ட் 25 மில்லி

 முதலில் நீங்கள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் போதுமான அளவு தண்ணீரை ஊற்றி சூடாக்கிக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விட்டு அதை தோளோடு அப்படியே போட்டு விடுங்கள்.

 இப்போது இதில் மூன்று ஸ்பூன் அளவு உப்பை சேர்த்து விட வேண்டும். இந்த கலவை சுமார் 20 லிருந்து 30 நிமிடங்கள் அப்படியே நன்றாக கொதிக்க வேண்டும்.

 நன்கு இந்த கலவை  கொதித்து இருக்கக்கூடிய வேளையில் அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு அதில் பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூனை போட்டு 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இந்த கலவையின் நிறம் மாறிவிடும்.

 நிறம் மாறியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். அடுத்து இதை வடிகட்டி ஒரு பௌலில் வைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த பொருளோடு நீங்கள் வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு டிடர்ஜென்ட் பொடி அல்லது துணி துவைக்கின்ற லிக்விடை சிறிதளவு கலந்து கொள்ள வேண்டும்.

 இப்போது எந்த லிக்விடை கொண்டு நீங்கள் உங்கள் பாத்திரத்தை துலக்கும் போது பள பளவென்று மின்னும். நீங்களும் குறைந்த அளவு செலவில் பக்க விளைவில்லாத எந்த லிக்விட்டை  மாதம் ஒருமுறை செய்து கொள்வதின் மூலம்  நீங்கள் ஓவ்வாமையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் ஓய்வு நேரங்களில் இதை செய்து அருகில் இருக்கும் வீடுகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்கள் வருவாயை உயர்த்திக் கொள்ளவும் முடியும்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …