தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட இயக்குனரும் குணச்சித்திர நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமான சுந்தரராஜன் 1970 களில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.
தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
நடிகர் சுந்தர்ராஜன் இயக்கிய படங்கள்:
தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை, அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை, சரணாலயம் , தூங்காத கண்ணின்று ஒன்று, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், குங்குமச்சிமிழ், சுகமான ராகங்கள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு ,என் ஜீவன் பாடுது, காலையும் நீயே மாலையும் நீயே சுயம்வரம், காலமெல்லாம் காத்திருப்பேன், சீதனம் ,காந்தி பிறந்த மண் ,என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.
அத்துடன் நடிகராகவும் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். குறிப்பாக குசேலன் , பெரிய இடத்து மாப்பிள்ளை, நட்புக்காக ,பெரிய அண்ணா உள்ளிட்ட படங்களில் இவரது ரோல் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
இதனிடையே சுந்தர்ராஜன் ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அசோக் தீபக் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியை செய்து வந்த இவரது மனைவி பல்வேறு திரைப்படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
திரைப்படங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடித்துக் கொண்டு படு பிஸியாக இருந்த சமயத்தில். தங்களது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை குறித்து சுவாரசியமான சில தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
மனைவியின் பேட்டி:
நானும் என் கணவரும் சினிமாவில் படு பிஸியாக உழைத்துக் கொண்டிருந்தோம். நான் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக. உட்காரக்கூட நேரமில்லாமல் ஸ்டுடியோ ஸ்டுடியோவாக சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவரும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நாங்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கும் கூட நேரமில்லாத அளவுக்கு உழைத்துக் கொண்டு இருந்தோம்.
ஒரு மாத கணக்கில் அவர் ஷூட்டிங் போய்விடுவார். பொள்ளாச்சி , கோயம்புத்தூர், இப்படி பல இடங்களில் வெவ்வேறு இடங்களில் ஷூட்டிங்கிற்கு சென்று கொண்டே இருப்பார்.
நானும் அதை போல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன்.
ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து வருவார் நான் எங்கே இருக்கிறேன் என வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு அப்போது நான் ஏதேனும் ஸ்டுடியோவில் இருந்தால் நேராக காரை எடுத்துக்கொண்டு ஸ்டுடியோவிற்கு வந்துவிடுவார்.
10 வருஷமா காரிலே குடும்பம் நடத்தினோம்:
நாங்கள் 10 வருடங்களாக காரில் தான் பேசிக் கொள்வோம். கிட்டத்தட்ட அந்த ஒரு மாதம் கழித்து வந்தால் கார் பயணத்தில் குழந்தைகள் மற்றும் வருமானம் குடும்பத்தை நடத்த பணம் இது எல்லாவற்றையும் பற்றியும் காரிலேயே பேசி முடித்துக் கொள்வோம்.
அன்று இரவே அவர் ஷூட்டிங்கிற்காக விமானம் ஏற வேண்டியிருக்கும். இப்படித்தான் எங்களது வாழ்க்கை கிட்டத்தட்ட 10 வருடங்களாக காரிலேயே பயணித்துக் கொண்டிருந்தோம்.
அந்த அளவுக்கு நாங்கள் இருவரும் பீக்கில் இருந்த போது படு பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தோம் என பிரபல குணச்சித்திர நடிகரான சுந்தர்ராஜன் மனைவி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.