இந்த படம் FLOP ஆகும்ன்னு தெரிஞ்சே எடுத்தோம்.. வெளிப்படையாக சொன்ன சுந்தர் சி..!

பிரபல நடிகையான குஷ்புவின் கணவரும் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராகம் இருந்து வந்தவர் தான் சுந்தர்சி.

இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திர ஹீரோக்களை வைத்து படம் இயக்கி பிரபலமான இயக்குனர் என்ற இடத்தை பிடித்து வைத்திருந்தார் .

மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்து படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்து கொண்ட சுந்தர் சி முதன் முதலில் முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் .

இயக்குனர் சுந்தர் சி:

முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படமாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், வின்னர் , லண்டன், கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி ஒரு காலத்தில் பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டு வந்தார் .

இதனுடைய அவர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தால் சுந்தர்.சி அதன் மூலம் மக்களுக்கு முகமறியப்பட்ட நடிகராகவும் இயக்குனராகவும் தென்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களான வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், ஐந்தாம் படை, குரு சிஷ்யன் , நகரம் , அரண்மனை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

குஸ்புவுடன் திருமணம்:

இதனிடையே நடிகை குஷ்புவை காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு அவந்திகா , ஆனந்திதா என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு தனது மனைவி குஷ்பூவுடன் இணைந்து அவ்னி சினிமாஸ் என தயாரிப்பு நிறுவனத்தையும் சுந்தர் சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படம் தோல்வியை சந்திக்கும் என்று தெரிந்தே நாங்கள் எடுத்தோம் எனக்கூறியுள்ளார் சுந்தர் சி.

ஆம், நாங்கள் ஒரு படம் பிளாக் ஆகும் அப்படின்னு தெரிந்தே எடுத்தோம். இரண்டாவது நாள் ரைட்டர் வந்து என்கிட்ட கேட்டாரு நான் படத்தோட கதையை போய் ஹீரோ கிட்ட சொல்லிட்டு வந்திடுறேன் அப்படின்னு கேட்டாரு.

சரி நீங்க போய் சொல்லுங்க என்று சொன்னவுடனே அவர் ஹீரோவிடம் சென்று சொன்னார். நான் உடனே கிளம்பி விட்டேன்.

அந்த படம் Flop ஆகும்னு தெரிஞ்சே எடுத்தேன்:

அடுத்த நாள் அந்த ரைட்டர் என்னிடம் வந்து தம்பி நீங்க இல்லாம போயிட்டீங்க நான் ஹீரோ கிட்ட படத்தோட கதையை சொன்ன உடனே அவர் ரொம்ப பீல் பண்ணி அழுத்துட்டாரு என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் எனக்கே ஷாக் ஆயிடுச்சு…. நம்ம கதைல அப்படி ஒன்னும் இல்லையே என்று எனக்கே தோன்றுச்சு.. உடனே நான் ஹீரோவை சந்தித்தபோது நீங்க படத்தோட கதையை கேட்டு அழுதுட்டீங்களாமே என்று கேட்டேன்.

அதற்கு அவர் ஆமாம்… படத்தோட கதையை கேட்காமல் படத்துல கமிட்டாகிட்டோமே அப்படின்னு நினைச்சு அழுதேன் என்று ஹீரோ சொன்னார் என மிகுந்த கலகலப்போடு பேசினார் சுந்தர்சி.

அதன் பிறகு அந்த படம் எடுத்தும் வெளியாகி அட்டர் பிளாப் ஆகிவிட்டது என கூறி இருந்தார் சுந்தர் சி. சுந்தர் சியின் இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் பல பேர் அது என்ன படமாக இருக்கும்? என ஆளாளுக்கு கூறி வருகிறார்கள்.

சிலர் அழகர்சாமி, அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த சின்னா, உன்னை கண் தேடுதே, உள்ளிட்ட படங்களாக தான் இருக்கும் என பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

ஆனால், நெட்டிசன்ஸ் சிலர்…. அடப்பாவிகளா ப்ரொடியூசர், டிஸ்ட்ரிபியூட்டர், டிக்கெட் எடுத்து வந்து பார்க்கும் ரசிகர்களை கொஞ்சமாவது யோசிச்சு பாத்தீங்களா? இப்படி விளையாடி இருக்கீங்களே என விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version