வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்..? – தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!

வீட்டில் எப்போதுமே ஸ்ரீதேவி வாசம் செய்ய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். இதன் மூலம் அந்த வீட்டில் செல்வம் பொங்கி பொழியும் என்பது  சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கக்கூடிய நியதியாகும்.

 எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை காசு எங்கு செல்கிறது என்று தெரியவில்லை என்று புலம்ப கூடிய அனைவரும் இந்த செயல்களை உங்கள் வீட்டில் செய்வதின் மூலம் செல்வம் குறையாமல் நிறைந்து இருக்கும்.

 எப்போதுமே வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் அவசியமான ஒன்று. பெருமாளை வழிபட, பட மகாலட்சுமியின் கருணை பார்வை அந்த வீட்டுக்கு கிட்டும்.

 குறிப்பாக புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளை நீங்கள் பூஜிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் கொட்டும்.

 வீட்டில் உப்பு இருந்தால் அந்த உப்பு ஜாடியில் உப்பு எப்போதும் தீரக்கூடாது. எடுக்க எடுக்க குறையாமல் அந்த உப்பு அப்படியே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உப்பினை தவறி கூட கீழே போடாதீர்கள்.

 அப்படி போட்டு அந்த உப்பை உங்கள் காலில் படுமாறு நீங்கள் பண்ணினால் துரதிஷ்டம் ஏற்படும். எனவே உப்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உப்பு என்பது லக்ஷ்மி தேவியின் அம்சம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 வீட்டில் அனைத்து இடங்களிலும் நேர்மறை ஆற்றலோடு தெய்வீக சக்தி குடிகொள்ள நீங்கள் மலர்கள் அல்லது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை போட்டு வீட்டை எப்போதும் நறுமணத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

 அவ்வாறு செய்வதின் மூலம் செல்வம் குறையாமல் தரித்திரம் அண்டாமல் இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் காதுகள் குளிரும்படியாக நீங்கள் சஷ்டி கவசம், பக்தி பாடல்கள் வேத பாராயணங்களை கேட்பது சிறப்பானது.

 இதன் மூலம் நீங்கள் நேர்மறை ஆற்றலை உங்கள் வீட்டில் நிலை நிறுத்துவதோடு தெய்வீக சக்தியை கொண்டு வந்து சேர்க்க முடியும். உங்கள் வீட்டில் உப்பு எப்படி குறையாமல் இருக்க வேண்டுமோ அதே போல் அரிசி அளக்கும் படி இருக்க வேண்டும்.

 அதற்கு பதிலாக நீங்கள் சில்வர் டம்ளர், பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். எனவே வீட்டில் செல்வ வளத்தை அள்ளித் தரக்கூடிய அரிசி படி உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் செல்வாக்கு உயரும்.

 வீட்டில் இருக்கும் பூஜை அறையில் காலையிலும் மாலையிலும் கண்டிப்பாக விளக்கு ஏற்றுவதை மறவாமல் செய்யுங்கள். இதன் மூலம் தெய்வ கடாட்சம் உங்களுக்கு ஏற்படும்.

 அதுபோலவே மகாலட்சுமியின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். மேலும் நீங்கள் காலையில் எழுந்து பார்க்கும் போது லட்சுமியின் படத்தை வைத்துப் பார்த்தால் நல்லது. செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியை பார்த்தபின் உங்கள் செயல்களை செய்ய துவங்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam