என்னென்ன சொல்றான் பாருங்க… செடி வளர்த்தா எப்படிங்க கடன் தொல்லை நீங்க செய்யும் என்று நீங்கள் கேட்கலாம் செடி வளர்ப்பதால் கடன் தொல்லை தீர போவதில்லை ஆனால் அதற்குண்டான வழி பிறக்கும்.
நம்புங்கள் சில செடிகளை உங்கள் வீட்டில் வளர்ப்பதன் மூலம் உங்களை சோர்வடைய செய்யக்கூடிய எதிர்மறை சக்திகளை உங்களிலிருந்து விரட்டலாம் மற்றும் உங்களிடம் அண்டாமல் பாதுகாக்கலாம்.
குறிப்பாக கண் திருஷ்டி என்று சொல்லப்படக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறது. அது, உங்களை எதுவும் செய்யாது. ஆனால், உங்களை செயல்பட விடாமல் தடுக்கும்.. அல்லது உங்களுடைய வேகத்தை குறைக்கும். அதன் மூலம் உங்களுடைய வருமானத்தை குறைக்கும். இது நிதர்சனம்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது முன்னோர்களின் மொழி. கண்ணாடி மட்டுமல்ல உங்களை சுற்றி இருக்கக்கூடிய உறவினர்கள் நண்பர்கள் எதிரிகள் இவர்களுடைய தீய பார்வை உங்களை சுற்றி உங்களுடைய உயிர் சக்தியில் கலந்து ஒரு குழப்பமான நிலைக்கு உங்களுடைய உயிர் சக்தியை தள்ளும்.
அப்படி உங்களுடைய உயிர் சக்தியை குழப்பக் கூடிய எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்க கூடிய அல்லது உங்களை அண்டாமல் செய்யக்கூடிய சில தாவரங்கள் இருக்கின்றன.
இவற்றை உங்களுடைய இல்லத்தில் நீங்கள் வளர்ப்பதன் மூலம் உங்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை துரத்திவிட்டு நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதனை எந்த ஒரு தடையும் இல்லாமல் காரிய தடை இன்றி அந்த விஷயத்தை உங்களால் செய்து முடிக்க முடியும்.
அப்படி செய்யும் பொழுது உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் பொழுது உங்களுடைய கடன் தொல்லை தீர்ந்து விடும். இதனால் தான் இந்த செடியை வளர்க்கும் பொழுது கடன் தொல்லை தீரும் என்று கூறுகிறோம் வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
வீட்டில் நல்ல காற்றினை உற்பத்தி செய்யவும் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடுகளை உள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய குறும் செடிகள் உள்ளது. அதில் குறிப்பாக பாம்பு செடி , மணி பிளான்ட் இந்த இரண்டு செடிகளை நீங்கள் உங்கள் வீட்டில் வளர்த்தால் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் செல்வத்தையும் அள்ளித்தரும் என்று கூறுகிறார்கள்.
அந்த செடிகளின் வரிசையில் இன்று இரண்டு செடிகளை நாம் காணலாம். அதில் ஒன்றுதான் பாம்பு செடி மற்றொன்று எல்லோருக்கும் நன்கு தெரிந்த மணி பிளான்ட்.
இன்று உள்ள காலகட்டத்தில் இயற்கையை பேணிப் பாதுகாக்க நமக்கு அவசியம் மரம் நடுதல் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் மூலம் தான் நாம் குளோபல் வாமிங் எனக்கூடிய என அழைக்கப்படக்கூடிய உலகம் வெப்பமயமாவதை தடுக்க முடியும்.
வீட்டில் இடம் இல்லை என்றாலும் இருக்கின்ற இடத்தில் பல வகையான செடிகளை வளர்த்துவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை நாம் அடையலாம். மனிதர்கள் இல்லாத பூமியை நம்மால் நினைத்துப் பார்க்க முடியும் என்று கேட்கக் கூடிய அளவு ஒரு கேள்விக்குறியை நம்முள் ஏற்படுத்தும்.
மனிதர்கள் உயிர்வாழத் தேவையான உயிர் காற்றான ஆக்சிஜனை அதிக அளவு தரக்கூடிய தன்மை மரங்களுக்கு மட்டுமே உண்டு.
பாம்பு செடி
இந்தப் பாம்பு செடியை ஆங்கிலத்தில் ஸ்நேக் பிளான்ட் என்று அழைக்கிறோம் வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த செடி புனிதமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சரி இருக்கும் இடத்தில் பாம்பு வாசம் செய்யாது என்று கிராமத்தில் இருப்பவர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் அதிகரிப்பதோடு வீட்டில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும்.
இந்தச் செடியை குழந்தைகள் படிக்கக்கூடிய படிக்கும் 1/2 கிலோ அல்லது அவர்கள் அமர்ந்து படிக்கும் இடத்திலோ, வைத்தால் அவர்கள் படிப்பில் முன்னேறுவதோடு செல்வாக்கும் பெருகும். எனவே இந்தச் செடியை குறிப்பாக வீட்டின் ஹால் மற்றும் படுக்கை அறை வெளி முற்றத்தில் வைத்து வளர்க்கலாம்.
மணி பிளான்ட்
பெருவாரியான மக்களுக்கு பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றால் மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஒரு எதார்த்த கருத்து நிலவி வருவது உண்மைதான். இந்த மணி பிளான்ட் உங்கள் வீட்டில் உள்ளேயோ அல்லது வெளியையோ வளர்க்கும் போது வாழ்வில் முன்னேற்றத்தை அடையலாம்.
அது மட்டுமல்ல செல்வம் செழிப்பாக வீட்டில் என்றுமே இருக்கும் என்று கூறுகிறார்கள் எனவே இந்த இரண்டு செடிகளையும் கட்டாயம் உங்கள் வீட்டில் வளர்த்து வாருங்கள்.