விஜய்.. கமல்.. ரஜினி.. வினோதமான உணவு பழக்கங்கள்.. ஒரு நாள் கூட மிஸ் பண்ண மாட்டங்களாம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக இருந்து வரும் பிரபலமான நடிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம் பிட் தோற்றத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்கும், சண்டை காட்சிகளுக்கும் பக்காவாக பொருந்துபவராக தங்களது உடலை மெய்ண்டெயின் செய்து வர வேண்டும் .

உடல் ஆரோக்கியத்தில் நடிகர்கள் கவனம்:

நடிகர்களுக்கு நடிப்புத்திறமை எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல தங்களது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களும் அதை விரும்பி பார்ப்பார்கள். தொந்தியும் தொப்பையுமாக வந்து திரைப்படத்தில் காட்சி அளித்தால் அதை யாரும் விரும்பி பார்க்க மாட்டார்கள்.

அதனால் நடிகர்கள் பெரும்பாலும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தங்கள் உடலுக்கு செலவழிப்பதையே குறிக்கோளாக கொண்டிருப்பார்கள் .

24 மணி நேரமும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது, முறையான உணவு முறைகளை கடைப்பிடிப்பது, பால் ,பழம் உள்ளிட்ட சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது என தங்களது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்துவார்கள்.

நட்சத்திரங்களின் உணவு முறைகள்:

அளவான உணவை எடுத்துக்கொண்டு ஸ்லிம் பிட் உடலை மெயின்டைன் செய்வது இப்படியாகத்தான் நடிகர் நடிகைகள் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள் .

அந்த வகையில் பிரபலமான நட்சத்திர நடிகர்களாக இருந்து வரும் விஜய் , கமல் மற்றும் ரஜினியின் அன்றாட உணவுப் பழக்கங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஆம், தமிழ் நடிகர்களின் வினோதமான உணவுப் பழக்கங்களை பற்றி தான் நாம் இப்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அசைவு உணவு விரும்பியாக விஜய்:

தளபதி விஜய் அவர்கள் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என நான்வெஜ் ஐட்டம்ஸ் இல்லாத உணவுகள் ஒரு நாள் கூட சாப்பிடவே மாட்டாராம்.

சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி உள்ளிட்ட உணவுகள் விஜய்க்கு மிகவும் பிடித்தமான பிரியமான உணவுகளாக இருந்து வருகிறதாம்.

இவவளவு ஐட்டம் சாப்பிட்டு கூட எப்படி இவ்வளவு ஒல்லியாக ஸ்லிம் பிட்டாக இருக்கிறார் என விஜய்யின் ரசிகர்களே வியந்து கேட்கிறார்கள்.

இப்படி அசைவ உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடும் விஜய் ஸ்னாக்ஸ் ஐட்டம் பெரும்பாலும் சாப்பிடவே மாட்டாராம்.

தின்பண்டங்களை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையில்லாத விளைவுகள் வரும் என்பதால் அதை அறவே தவிர்த்து விடுவாராம் விஜய்.

காலை நல்ல சிற்றுண்டி சாப்பிடும் விஜய், மதியம் ஹெவியான அசைவ உணவுகளை சாப்பிட்டு அதன் பிறகு இரவு நேரத்தில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு உணவை முடித்துக் கொள்வாராம்.

கருப்பு காஃபிக்கு கமல் அடிமை:

அடுத்தது நடிகர் கமல்ஹாசன் உணவு முறை என எடுத்து பார்த்தோமானால் இவர் எல்லா அசைவ உணவுகளையும் விரும்பி சாப்பிடுபவராக இருந்து வருகிறார்.

ஆடு இறைச்சி உள்ளிட்டவற்றை அதிகமாக விரும்பி சாப்பிடுவாராம் கமல். கமல் மிகவும் எனர்ஜியாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக தினமும் பிளாக் காபி சர்க்கரை இல்லாமல் குடிப்பாராம்.

இவர்களை விட உணவு முறை பழக்க வழக்கத்தில் ஃபர்ஸ்ட் பிளேஸில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்ப காலகட்டத்தில் அசைவ உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவராக இருந்து வந்த சூப்பர் ஸ்டார் பின்னர் அதனால் சில உடல் நலக் கோளாறுகள் வந்ததால் அதை அறவே தவிர்த்து விட்டாராம்.

பியூர் வெஜிட்டேரியனாக சூப்பர் ஸ்டார்:

தற்போது ரஜினிகாந்த் பியூர் வெஜிடேரியனாக இருந்து வருகிறார் .சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிகம் விரும்பிடும் விரும்பி சாப்பிடும் உணவுகளான வத்த குழம்பு, ரசம் மற்றும் பால் பாயாசம் அத்துடன் வேர்க்கடலை என உணவை நிறுத்திக் கொள்வார்.

இந்த அளவுக்கு சராசரியான உணவை அளவோடு எடுத்து சாப்பிட்டு ஸ்லிம் பிட் உடலை மெயின்டைன் செய்து வருகிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version