ஒரு அம்மாவா நீ என்ன பண்ணுவ..? மேடையிலேயே கேள்வி எழுப்பிய மகள்..! அர்ச்சனா கொடுத்த பதிலை பாருங்க..!

ஒரு அம்மாவா ந என்ன பண்ணுவ..? மேடையிலேயே கேள்வி எழுப்பிய மகள்..! அர்ச்சனா கொடுத்த பதிலை பாருங்க..!

90ஸ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் ஃபேமஸான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வந்தவர்தான் விஜே அர்ச்சனா. இவர் ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாலினியாக தனது வாழ்க்கை துவங்கினார்.

அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸான தொகுப்பாளினியாக இடத்தைப் பிடித்தார்.

தொகுப்பாளினி அர்ச்சனா:

அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இணைந்த தொகுப்பாளினி அர்ச்சனா அதிர்ஷ்ட லக்ஷ்மி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற குழந்தைகளின் போட்டித் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார்.

இதை எடுத்து தனது மகள் சாராவுடன் இணைந்து சூப்பர் மாம்ஸ் என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார்

இதனிடையே கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

பிக்பாசில் அர்ச்சனா:

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தொகுப்பாளினி அர்ச்சனா அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த நிகழ்ச்சியில் அவரது நடவடிக்கை நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும் ஒரு நல்ல அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது.

2000 காலகட்டத்தில் இருந்து தொகுப்பாளினியாக தனது பணியை செய்து வரும் விஜே அர்ச்சனாவுக்கு தற்போது 41 வயதாகிறது .

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் இந்திய கடற்படையில் தளபதியாக பணியாற்றி வருவது குறிப்பிடும் தக்கது .

மகள் சாராவுடன் அர்ச்சனா:

இந்த தம்பதியினருக்கு சாரா என்ற ஒரு அழகிய மகள் பிறந்தார். சாரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸான தொகுப்பாளியாக இருந்து வருகிறார்.

கிட்டத்தட்ட 25களாக சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி வரும் விஜே அர்ச்சனா புதியதாக தொகுப்பாளினியாக வரும் பல பேருக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

இது தவிர அர்ச்சனா வைகை எக்ஸ்பிரஸ், ஆடை, நான் சிரித்தால் , டாக்டர் போன்ற சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது தங்களது வாழ்வில் நடக்கும் விஷயம் மற்றும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, குடும்பம் உள்ளிட்டவற்றைக் குறித்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகன் சாராவுடன் கலந்து கொண்டிருந்தார் .

மேடையில் விஜய்யை கேவலப்படுத்திய அர்ச்சனா:

அப்போது மகள் சாரா அர்ச்சனாவிடம் எனக்கு சினிமாவில் நடிக்க இரண்டு விதமான வாய்ப்புகள் வருது ஒன்னு சூப்பர் ஸ்டாருக்கு பேத்தியா நடிக்க வேண்டும்… இன்னொன்று தளபதி விஜய் அவர்களுக்கு மகளாக நடிக்க வேண்டும்…

இப்படி இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போது ஒரு அம்மாவாக நீ எனக்கு எதை தேர்வு செய்வாய்? என்று கேட்க அதற்கு அர்ச்சனா சூப்பர் ஸ்டாருக்கு பொண்ணு, பேத்தி எதுவாக இருந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு தான். என கத்திக் கூச்சல் இட்டு கூறினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் பலர்… நீ சினிமாவுக்கு வராமல் இருப்பது தான் சினிமாவிற்கு நல்லது என சாராவை திட்டி தீர்த்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version