ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் கரன் இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாள படங்களில் நடித்ததின் மூலம் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
மலையாளத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது உண்மையான பெயர் மாஸ்டர் ரகு அந்த பெயரிலே தான் மலையாளத்தில் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஒரே ஒரு படத்தில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு பின்னர் குணசித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.
இதையும் படியுங்கள்: “என் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்..” நடிகை மீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
அதன் பின்னர் ஹீரோ வாய்ப்பு கிடைக்க அதிலும் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமான நடிகராக வளம் வந்தார்.
குறிப்பாக 90களில் அதிகமான ஹிட் படங்களில் நடித்து பிரபலமான ஹீரோவாக நடிகர் கரண் தென்பட்டு வந்தார்
இவர் கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
குறிப்பாக ராஜஹம்சம், பிரியாணி, சுவாமி ஐயப்பா ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த கேரளா ஸ்டேட் பிலிம் விருதை பெற்றிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..
தமிழில் தீச்சட்டி கோவிந்தன் என்ற படத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், பின்னர் தமிழில் நம்மவர் என்ற படத்தில் கமல்ஹாசனுக்கு மாணவனாக நடித்திருந்தார்.
அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும், அடையாளத்தையும் கொடுத்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இவருக்கு ஹீரோாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தொட்டில் குழந்தை, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, வைகறை பூக்கள், காதல் கோட்டை பல படங்களில் வில்லத்தனத்தை தன்னுடைய நடிப்பில் வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார்.
ஹீரோவை காட்டிலும் இன்றளவு மக்களுக்கு மனதில் பதியும்படி அவன் அடித்த படங்கள் எல்லாமே வில்லன் நடிகராக நடித்து அசத்திய திரைப்படங்கள்தான். அதனால் இவர் அடுத்த ரகுவரன் என பலரும் இவரை புகழ் பாராட்டினர்.
சொல்லப்போனால் ரகுவரனின் வாரிசு கரண் என்றெல்லாம் ரசிகர்கள் கூறிவந்தனர். காரணம் நடிகர் கரணின் வில்லத்தனங்கள் அனைத்தும் நடிகர் ரகுவரனின் வில்லத்தனத்தை ஒத்துப்போகும் அளவுக்கு இருந்தன.
அந்த அளவுக்கு படங்களில் வில்லத்தனம் காட்டி நடித்தார் கரண். இதனால் ரசிகர்கள் பலரும் ரகுவரனின் வாரிசு நடிகர் கரண் தான். அடுத்த ரகுவரன் நடிகர் கரண்… என்று நடிகர் கரணை ரகுவரனின் வாரிசாகவே அடையாளப்படுத்தினர்.
பலரும் ரகுவரனின் வாரிசு தான் கரண் என்று நம்பவும் செய்தனர். அந்த அளவுக்கு கரண் நடிப்பில் கை தேர்ந்தவராக இருந்தார். அந்த அளவிற்கு சினிமாவில் ஆழமான இடத்தை தக்கவைத்திருந்த கரண் ஒரு கட்டத்தில் ஆள் அட்ரசே இல்லாமல் போய்விட்டார்.
இதற்கு என்ன காரணம்? அவர் எங்கு சென்றார்? அவரின் சினிமா வாழ்க்கை சரிந்தது எப்படி என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. கடுப்பான ரித்திகா கொடுத்த பதிலடி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!
சிறந்த நடிகர் என பேசப்பட்ட சமயத்தில் கரண் கிடைத்த பல வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என ஒற்றை காலில் நின்றார். அப்படி ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தும் அவர் பெரிதாக பேசப்படவில்லை.
இதனால் மார்ஜெட் இழந்து, மவுஸ் இழந்து திறைத்துறையில் அப்புறம் தள்ளப்பட்ட நடிகர்கள் லிஸ்டில் இணைந்துவிட்டார்.
அதுமட்டுமின்றி 42 வயது ஆண்டியை தனக்கு மேனேஜராக நியமித்து தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார்.
இதையும் படியுங்கள்: இதனால் தான் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்தேன்.. சிவகார்த்திகேயன் மேட்டர் to பர்சனல் மேட்டர்.. பாவனா ஓப்பன் டாக்..!
அந்த ஆண்டியின் கை பாவையாக மாற்றப்பட்ட கரண் தன்னுடைய சினிமா குறித்த எல்லா முடிவையும் அவரையே எடுக்க வைத்தார். இதனால் இப்போது தனது மொத்த கேரியும் அவர் இழந்துவிட்டார்.
இப்போவும் நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் குணசித்திர வேடம், வில்லன் ரோல் உள்ளிட்ட கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் தனது திறமையை நிரூபித்து காட்டினால் கரண் நிச்சயம் விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.