லண்டன் சென்ற கேப்ரில்லாவுக்கு நடந்தேறிய கொடுமை..!

நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த கேபிரில்லா தனது ஒன்பது வயதிலேயே நடன பயணத்தை தொடங்கினார்.

முதன் முதலில் தொலைக்காட்சி வாயிலாக ஜோடி ஜுனியர் கலந்துக்கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தையும் வென்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான. ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பங்கேற்றார்.

கேப்ரில்லா சார்ல்டன்:

தொடர்ந்து இப்படி நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கேபிரில்லாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலமாக 2012 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

குழந்தை நட்சத்திரமாக அந்த படத்தில் அவர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் பெற்று இருந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களை இவர் நடித்திருக்கிறார்.

இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

பிக்பாஸ் கொடுத்த அடையாளம்:

அந்த நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து எப்போதும் தனது சமூக வலைதள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் அவரை சமூக வலைத்தளங்களில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம் என்றே கூறலாம்.

அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பே கிடைத்தது. பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கேபிரில்லாவுக்கு கிடைத்தது.

இதனிடையே ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக அந்த சீரியல் பார்க்கப்படுகிறது. அந்த சீரியலில் காவியா என்ற ரோலில் கேப்ரில்லா நடித்து அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை கேபிரில்லா சில மாதங்களுக்கு முன்னர் லண்டனுக்கு ட்ரிப் அடித்திருக்கிறார்.

லண்டனில் நடந்த சோகம்:

அங்கிருந்து ஸ்காட்லாந்துக்கு ரயிலில் செல்லும் போது அவரது ஐபோன் 15 ப்ரோ மொபைல் தொலைந்து விட்டதாம்.

ஒன்றரை லட்சம் மதிப்புள்ள அந்த போன் தொலைந்து விட்டதால் மிகுந்த அப்செட்டுக்குள்ளான கேப்ரில்லா அது பற்றி ட்ராவல் நிறுவனம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளித்துள்ளார்.

ஆனாலும் அது கிடைக்கவே இல்லையாம். அதனால் ஏமாற்றத்துடன் இந்தியாவுக்கு திரும்ப வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

மொபைல் போன் தொலைந்த ஆப்செட்டில் ஏன் தான் வெளிநாட்டுக்கு டிப்ஸ் சென்றோமோ என்ற ஆப்செட்டில் இருப்பதாக செய்திகள் கூறுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version