வனிதாவின் இரண்டாவது மகள் என்ன ஆனார்..! இப்போ எங்கே இருக்கிறார் தெரியுமா..? வனிதாவே கூறிய தகவல்..!

சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு நடிகை வனிதா விஜயகுமார் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் ஓரளவுக்கு முகமறியப்பட்ட நடிகையாக இருந்து வந்தார் .

இருந்தாலும் இவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திய கொடுத்தது என்னவோ அவருடைய தந்தையான விஜயகுமாரின் மூலமாகத்தான் .

நடிகை வனிதா விஜயகுமார்:

ஆம், தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள்தான் வனிதா விஜயகுமார் .

1995ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் முதல் படமே விஜய்யுடன் அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ந்து அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

இதனால் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இதனிடையே குடும்ப பிரச்சனையில் ரசிக்கிய வனிதா சொத்து தகராறு காரணமாக தன்னுடைய அப்பாவுடன் கடுமையாக சண்டை போட்டு ரோட்டிலேயே இழுத்து சண்டை போட்ட விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானதாக பார்க்கப்பட்டது.

இதனால் வனிதா விஜயகுமார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது வரை அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து இருப்பதே கிடையாது.

பிக்பாஸிற்கு பிறகு குவியும் படவாய்ப்புகள்:

அவர் தனியாக தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இப்படியான நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்ற வனிதாவுக்கு அதை எடுத்து தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் தொலைக்காட்சி வாய்ப்புகள் என கிடைத்து வருகிறது.

இதனிடையே தனியாக தொழிலையும் துவங்கி நடத்தி வருகிறார். அதன்பின் வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா விஜயகுமாரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட ஜோவிகா தற்போது இயக்குனர் பார்த்திபனின் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

அவர் இயக்கத்தில் உருவாகி வரும் டீன்ஸ் திரைப்படத்தில் அவர் சிறிய கேரக்டர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இப்படியாக முதல் மகள் படு பிஸி ஆகிவிட்டார் .

இரண்டாவது மகள் என்ன ஆனார்?

இந்நிலையில் இரண்டாவது மகள் என்ன ஆனார்? அவர் இருக்கிறாரா இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமாக கூறியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது இரண்டாவது மகள் ஜெயந்திகா குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் நடிகை வனிதா.

என் இரண்டாவது ஜெயா இப்போ நன்றாக இருக்கிறாள். அவள் ஹைதராபாத்தில் இருக்கிறாள். அவள் இப்போது 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள் .

அவள் மிகவும் ஜாஸ்தியாக படிப்பார். ஒவ்வொரு சப்ஜெட்டுக்கும் டியூஷன்.. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் பங்கேற்று வருகிறாள்.

அவள் ஸ்கூல் டாப் மற்றும் ஸ்கூல் லீடர் வேற இதனால ஜெயா ரொம்ப படிப்பில் பிஸியா இருக்கிறாள். ஜெயாவுடைய அப்பாவுக்கும் எனக்கும் கஷ்டடி பிராப்ளம் நிறைய வந்துச்சு.

எனவே நான் அதை விட்டு விடாதது தான் மிகப்பெரிய பிரச்சினை. நான் பிக் பாஸில் கலந்துகொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாகிக் கொண்டிருக்கிற சமயத்தில் நாங்கள் ஒரு நல்ல டீசன்டான கான்வர்சேஷனை ஏற்படுத்திக் கொண்டோம் என தனது முன்னாள் கணவர் குறித்து பேசியிருக்கிறார்.

மேலும், அவ்வப்போது எந்த வந்து எங்களை சந்தித்து செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார் என வனிதா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version